The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
All other trademarks are the property of their respective owners.
வெளியீட்டுக் குறிப்பானது \nRed Hat Enterprise Linux 6.6 இல் செய்யப்பட்டுள்ள மேம்படுத்தல்கள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் பற்றிய மேலோட்டப் பார்வையை வழங்குகிறது 6.6 புதுப்பிப்புக்காக, Red Hat Enterprise Linux இல் செய்யப்பட்டுள்ள அனைத்து மாற்றங்கள் பற்றிய விரிவான ஆவணமாக்கத்திற்கு தொழில்நுட்பக் \nகுறிப்புகளைக் காணவும்.
Red Hat Enterprise Linux சிறு வெளியீடுகள், தனித்தனி மேம்படுத்தல்கள், பாதுகாப்பு மற்றும் வழு திருத்தங்களின் தொகுப்பாகும். Red Hat Enterprise Linux 6.6 வெளியீட்டுக் குறிப்புகள் ஆவணமானது இந்த சிறு வெளியீட்டில் Red Hat Enterprise Linux 6 இயக்க முறைமையிலும் அதனுடனான பயன்பாடுகளிலும் செய்யப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களை விவரிக்கிறது. இந்த சிறு வெளியீட்டிலான மாற்றங்கள் பற்றிய விரிவான விவரங்கள் (அதாவது, திருத்தப்பட்ட வழுக்கள், சேர்க்கப்பட்டுள்ள மேம்படுத்தல்கள் மற்றும் அறியப்பட்ட சிக்கல்கள்) தொழில்நுட்பக் குறிப்புகள் ஆவணத்தில் உள்ளது. தொழில்நுட்பக் குறிப்புகள் ஆவணத்தில் தற்போது கிடைக்கின்ற தொழில்நுட்ப முன்னோட்டங்கள் மற்றும் அவற்றை வழங்கும் தொகுப்புகள் பற்றிய முழுமையான பட்டியலும் உள்ளது.
முக்கியம்
இணையத்தில் here என்ற முகவரியில் கிடைக்கின்ற Red Hat Enterprise Linux 6.6 வெளியீட்டுக் குறிப்புகள் ஆவணமே இறுதியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகக் கருதப்பட வேண்டும். இந்த வெளியீடு தொடர்பான கேள்விகள் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது Red Hat Enterprise Linux பதிப்புக்குரிய, இணையத்திலுள்ள வெளியீட்டு மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகளைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மற்ற பதிப்புகளுடனான ஒப்பீட்டில் Red Hat Enterprise Linux 6 இன் திறப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் விவரம் https://access.redhat.com/site/articles/rhel-limits என்ற முகவரியில் உள்ள த்காவல் களஞ்சியக் கட்டுரையில் கிடைக்கும்.
SCSI அலகு கவனிப்பு கையாளுகை மேம்படுத்தப்பட்டுள்ளது
Red Hat Enterprise Linux 6.6 இல் உள்ள கெர்னலானது சில குறிப்பிட்ட SCSI சாதனங்களிலிருந்து udev நிகழ்வு இயங்கம்சத்தின் வழியாகப் பெறப்படும் SCSI அலகு கவனிப்பு நிபந்தனைகளுக்கு பயனர் வெளி பதிலளிக்கும் வசதியை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பின்வரும் அலகு கவனிப்பு நிபந்தனைகள் ஆதரிக்கப்படும்:
ஆதரிக்கப்படும் அலகு கவனிப்பு நிபந்தனைகளுக்கான முன்னிருப்பு udev விதிகள் libstoragemgmt RPM தொகுப்பால் வழங்கப்படுகின்றன. udev விதிகள் /lib/udev/rules.d/90-scsi-ua.rules கோப்பில் உள்ளன.
முன்னிருப்பு விதிகள் REPORTED LUNS DATA HAS CHANGED அலகு கவனிப்பைக் கையாள்கின்றன. கெர்னலால் உருவாக்க முடிகின்ற பிற நிகழ்வுகளை எண்ணிடுவதற்காக கூடுதல் எடுத்துக்காட்டு விதிகள் இடம்பெற்றுள்ளன. முன்னிருப்பு விதிகள் SCSI இல் இல்லாத தருக்க அலகு எண்களை (LUNகள்) தானாகவே நீக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு SCSI கட்டளைக்கு பதிலளிப்பாக மட்டுமே SCSI அலகு கவனிப்பு நிபந்தனைகள் அறிக்கையிடப்படுகின்றன, இதனால் SCSI சாதனத்திற்கு நடப்பில் கட்டளைகள் எதுவும் அனுப்பப்படாவிட்டால் நிபந்தனைகள் எதுவும் அறிக்கையிடப்படாது.
udev விதிகளை மாற்றியமைப்பதன் மூலம் அல்லது நீக்குவதன் மூலம் முன்னிருப்பு நடத்தையை விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியும். libstoragemgmt RPM தொகுப்பு நிறப்படவில்லை எனில், முன்னிருப்பு விதிகள் இருக்காது. அந்த நிகழ்வுகளுக்கு udev விதிகள் இல்லாவிட்டால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது, ஆனால் அப்போதும் நிகழ்வுகள் கெர்னலால் உருவாக்கப்படும்.
திறந்தநிலை vSwitch கெர்னல் தொகுதிக்கூறு
Red Hat Enterprise Linux 6.6 இல் Open vSwitch கெர்னல் தொகுதிக்கூறு உள்ளது, இது Red Hat இன் அடுக்கமைவுத் தயாரிப்புகளைச் செயல்படுத்தும் அம்சமாகச் செயல்படுகிறது. Open vSwitch ஆனது பயனர் வெளி நிரல்கருவிகளைக் கொண்ட தயாரிப்புகளுடன் சேர்த்து மட்டுமே ஆதரிக்கப்படுகிறது. தேவையான இந்தப் பயனர் வெளி நிரல்கருவிகளில்லாமல், Open vSwitch செயல்படாது, அதைச் செயல்படுத்தவும் முடியாது. மேலும் தகவலுக்கு இந்த தகவல் களஞ்சியக் கட்டுரையைப் பார்க்கவும்: https://access.redhat.com/knowledge/articles/270223.
பாடம் 2. பிணையமாக்கல்
HPN துணை நிரலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
Red Hat Enterprise Linux 6.6 இல் தொடங்கி, ஹை பெர்ஃபாமன்ஸ் நெட்வொர்க்கிங் (HPN) துணை நிரலானது தனி தயாரிப்பாகக் கிடைக்காது. மாறாக, HPN துணை நிரலின் செயலம்சமானது அடிப்படைத் தயாரிப்பில் ஒருங்கிணைப்பட்டுள்ளது, அது Red Hat Enterprise Linux அடிப்படை சேனலின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது.
HPN செயலம்சத்தை அடிப்படை Red Hat Enterprise Linux 6 தயாரிப்பில் ஒருங்கிணைத்ததுடன் கூடுதலாக, RDMA ஓவர் கன்வெர்ஜ்டு ஈத்தர்நெட் (RoCE) செயல்படுத்தலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. RoCE ஆனது கனுவுக்கும் கனுவுக்குமான தகவல் பரிமாற்றத்திற்கு ஒட்டுமொத்த அடையாளங்காட்டி அல்லது GID-அடிப்படையிலான முகவரியிடலைப் பயன்படுத்துகிறது. முன்னர், GIDகள் ஈத்தர்நெட் இடைமுகங்களின் MAC முகவரியையும் VLAN ID ஐயும் (பயன்படுத்தப்பட்டிருந்தால்) அடிப்படையாகக் கொண்டு குறியீடாக்கம் செய்யப்பட்டன. சில சந்தர்ப்பங்களில், RoCE நெறிமுறையை இயக்கும் கணினி உருப்படியானது, அதன் போக்குவரத்து VLAN-குறியிடப்பட்டது என்பதை அறிந்திருக்காது. அப்போது கணினி உருப்படியானது சிலசமயங்களில் ஒரு தவறான GID ஐ உருவாக்கவோ அல்லது அமைக்கவோ கூடும், இதனால் இணைப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். புதுப்பிக்கப்பட்ட RoCE செயல்படுத்தலானது RoCE GIDகள் குறியீடாக்கம் செய்யப்படும் விதத்தை மாற்றி, அவற்றை ஈத்தர்நெட் இடைமுகங்களின் IP முகவரிகளின் அடிப்படையில் அவற்றை அமைப்பதன் மூலம் இந்தச் சிக்கலைத் தீர்க்கிறது. RoCE நெறிமுறையைப் பயன்படுத்தும் அனைத்து கணினிகளும், வயர் நெறிமுறை வடிவமைப்பிலான இந்த மாற்றத்தினால் இணைப்புத்தன்மையிலான நம்பகத்தன்மையை உறுதியாக்கிக்கொள்ள Red Hat Enterprise Linux 6.6 க்கு தரமேற்றப்பட வேண்டும்.
Red Hat Enterprise Linux 6.6 இல், பாதுகாப்பு வழிகாட்டல், அடிப்படைகள் மற்றும் பாதுகாப்பு உள்ளடக்கத் தானியக்கமாக்க நெறிமுறையைப் (SCAP) பயன்படுத்துகின்ற, சம்பந்தப்பட்ட செல்லுபடியாக்க இயங்கம்சங்கள் ஆகியவற்றை வழங்கும் scap-security-guide தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. SCAP Security Guide இல் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்புக் கொள்கைத் தேவைகள் தொடர்பான கணினி பாதுகாப்பு இணக்க சோதனைகளைச் செய்யத் தேவையான தரவு உள்ளது; எழுத்துவடிவிலான விளக்கம் மற்றும் தானியக்க சோதனை (ஆய்வு) இரண்டுமே உள்ளது. சோதனையை தானியக்கமாக்குவதன் மூலம், SCAP Security Guide தொகுப்பானது அடிக்கடி கணினி இணக்கத்தைச் சரிபார்க்க நம்பகமான மற்றும் வசதியான வழியளிக்கிறது.
பாடம் 4. மெய்நிகராக்கம்
புதிய தொகுப்புகள்: hyperv-daemons
Red Hat Enterprise Linux 6.6 இல் புதிய hyperv-daemons தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய தொகுப்பில் முன்னர் hypervkvpd தொகுப்பால் வழங்கப்பட்ட Hyper-V KVP டீமான், முன்னர் hypervvssd தொகுப்பால் வழங்கப்பட்ட Hyper-V VSS மற்றும் முன்னர் முன்னர்hypervfcopyd தொகுப்பால் வழங்கப்பட்ட hv_fcopy டீமான் ஆகியவை உள்ளன. hyperv-daemons தொகுப்பால் வழங்கப்படும் டீமான்களின் தொகுப்பானது, ஒரு Linux விருந்தினர் Microsoft Windows வழங்கியில் Hyper-V உடன் இயங்கும் போது தேவைப்படும்.
Several significant enhancements to device-mapper have been introduced in Red Hat Enterprise Linux 6.6:
The dm-cache device-mapper target, which allows fast storage devices to act as a cache for slower storage devices, has been added as a Technology Preview.
இப்போது device-mapper-multipath ALUA முன்னுரிமை சோதனைக் கருவியானது, தனது பாதையில் சுமை சமநிலைப்படுத்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய பிற பாதைகள் இருந்தால், விரும்பப்படும் பாதை சாதனத்தை தனது பாதையில் வைப்பதில்லை.
multipath.conf கோப்பில் உள்ள fast_io_fail_tmo அளவுருவானது ஃபைபர் சேனல் சாதனங்களில் மட்டுமின்றி இப்போது iSCSI சாதனங்களிலும் செயல்படுகிறது.
சாதன மேப்பர் பலபாதையானது sysfs கோப்புகளைக் கையாளும் வகை மேம்படுத்தப்பட்டுள்ளது, இதனால் பெரும் எண்ணிக்கையிலான பலபாதை சாதனங்களை அமைப்பதில் சிறந்த செயல்திறனைப் பெறலாம்.
multipath.conf கோப்பில் force_sync எனும் ஒரு புதிய அளவுரு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுருவானது ஒத்திசைவற்ற பாதை சோதனைகளை முடக்குகிறது, இதனால் பெரும் எண்ணிக்கையிலான பலபாதை சாதனங்களை அமைக்கையில், CPU போட்டிச் சிக்கல்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிகிறது.
dm-era தொழில்நுட்ப முன்னோட்டம்
இப்போது device-mapper-persistent-data தொகுப்பானது, தொழில்நுட்ப முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ள புதிய dm-era சாதன மேப்பர் செயலம்சத்தைப் பயன்படுத்த உதவும் கருவிகளை வழங்குகிறது. dm-era செயலம்சமானது, era எனப்படும் பயனர் வரையறுக்கும் ஒரு கால அளவுக்குள் ஒரு சாதனத்தில் எந்தெந்த ப்ளாக்குகள் எழுதப்பட்டன எனக் கண்காணித்து வைக்கிறது. இந்தச் செயலம்சத்தின் உதவியால், காப்புப்பிரதி மென்பொருளானது மாற்றம் செய்யப்பட்ட ப்ளாக்குகள் எவை எனக் கண்காணிக்க முடிகிறது அல்லது மாற்றங்களைத் திரும்பப்பெற்ற பிறகு ஒரு தேக்ககத்தின் ஓரியல் தன்மையை மீட்டமைக்க முடிகிறது.
பாடம் 6. வன்பொருள் செயல்படுத்தல் தன்மை
Intel வைல்ட்கேட் பாயின்ட்-LP PCH க்கான ஆதரவு
இயக்கிகளுக்காக ப்ராட்வெல்-U PCH SATA, HD ஆடியோ, TCO வாட்ச்டாட் மற்றும் I2C (SMBus) சாதன IDகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன, இது Red Hat Enterprise Linux 6.6 இல் அடுத்த தலைமுறை மொபைல் இயங்குதளத்துக்கான ஆதரவைச் செயல்படுத்துகிறது.
VIA VX900 மீடியா சிஸ்ட்டம் செயலிக்கான ஆதரவு
Red Hat Enterprise Linux 6.6 இல் VIA VX900 மீடியா சிஸ்ட்டம் செயலி ஆதரிக்கப்படுகிறது.
பாடம் 7. தொழிற்துறைத் தரநிலைகளும் சான்றிதழும்
Fips 140 மறுசெல்லுபடியாக்கங்கள்
ஃபெடரல் இன்ஃபர்மேஷன் ப்ராசசிங் ஸ்டான்டர்ட்ஸ் பப்ளிகேஷன்ஸ் (FIPS) 140 அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்புத் தரநிலையாகும், இந்தத் தரநிலை, அதிமுக்கியமான, ஆனால் பகுக்கப்படாத தகவலைப் பாதுகாக்கும் பாதுகாப்பு முறைமைக்குள் பயன்படுத்தப்படும் கிரிப்ட்டோகிராஃபிக் தொகுதிக் கூறானது கட்டாயம் திருப்திப்படுத்த வேண்டிய பாதுகாப்புத் தேவைகளைக் குறிப்பிடுகிறது. இந்தத் தரநிலையானது நான்கு, அதிகரிக்கும் தன்மையுள்ள மற்றும் தரவியல் நிலைகளிலான பாதுகாப்பை வழங்குகிறது, அவை: நிலை 1, நிலை 2, நிலை 3 மற்றும் நிலை 4 ஆகும். இந்த நிலைகள் கிரிப்ட்டோகிராஃபிக் கூறுகள் பயன்படுத்தப்படும் சாத்தியமுள்ள பயன்பாடுகள் மற்றும் சூழல்களின் பரந்துபட்ட வரம்பிற்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத் தேவைகள் என்பவை ஒரு கிரிப்ட்டோகிராஃபிக் தொகுதிக்கூறின் பாதுகாப்பான உருவாக்கம் மற்றும் செயல்படுத்தல் தொடர்பானவற்றுக்கு உரியவை. இந்தப் பகுதிகளில் கிரிப்ட்டோகிராஃபிக் தொகுதிக்கூறின் விவரக்குறிப்பு, கிரிப்ட்டோகிராஃபிக் தொகுதிக்கூறின் துறைகள் மற்றும் இடைமுகங்கள்; பங்குகள், சேவைகள் மற்றும் அங்கீகரிப்பு; வரையறுக்கப்பட்ட நிலை மாதிரியம்; இயல்நிலைப் பாதுகாப்பு; செயல்பாட்டுச் சூழல்; கிரிப்ட்டோகிராஃபிக் விசை நிர்வாகம்; மின்காந்தவியல் இடைமுகம்/மின்காந்தவியல் இணக்கத்தன்மை (EMI/EMC); சுய சோதனைகள்; வடிவமைப்பு உத்தரவாதம் மற்றும் பிற தாக்குதல்களின் இடப்பெயர்ப்பு ஆகியவை அடங்கும்.
பின்வரும் இலக்குகள் முழுமையாக செல்லுபடியாக்கம் செய்யப்பட்டுள்ளன:
NSS FIPS-140 நிலை 1
தொகுப்பு B நீள்வட்ட வளை கிரிப்டோகிராபி (ECC)
பின்வரும் இலக்குகள் மறுசெல்லுபடியாக்கம் செய்யப்பட்டுள்ளன:
OpenSSH (கிளையன்ட் மற்றும் சேவையகம்)
Openswan
dm-crypt
OpenSSL
தொகுப்பு B நீள்வட்ட வளை கிரிப்டோகிராபி (ECC)
கெர்னல் கிரிப்ட்டோ API
AES-GCM, AES-CTS மற்றும் AES-CTR சிஃபர்கள்
பாடம் 8. அங்கீகாரம் மற்றும் இடைசெயல் தன்மை
Active Directory உடன் இன்னும் சிறப்பான இடைசெயல் தன்மை
System Security Services Daemon (SSSD) இல் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள செயலம்சத்தினால், Red Hat Enterprise Linux கிளையன் கணினிகள் Active Directory உடன் இன்னும் சிறப்பான இடைசெயல் தன்மை கொண்டிருக்க முடிகிறது, இதனால் Linux மற்றும்Windows சூழல்களில் அடையாள நிர்வாகம் எளிதாகிறது. பயனர்கள் மற்றும் குழுக்களைத் தீர்மானித்தல், ஒரே ஃபாரஸ்ட்டில் உள்ள நம்பகமான டொமைன்களிலிருந்து பயனர்கள் மற்றும் குழுக்களை அங்கீகரித்தல், DNS புதுப்பிப்புகள், தளக் கண்டுபிடிப்பு, பயனர் மற்றும் குழுத் தேடியறிதலுக்கு NetBIOS பெயரைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை முக்கியமான மேம்படுத்தல்களாகக் குறிப்பிடலாம்.
IPA க்கான Apache தொகுதிக்கூறுகள்
Red Hat Enterprise Linux 6.6 இல் சில Apache தொகுதிக்கூறுகள் தொழில்நுட்ப முன்னோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளன. எளிய அங்கீகரிப்புக்கும் அப்பால் மிக கடுமையான இடைசெயல் வசதியைப் பெறுவதற்காக வெளிப்புறப் பயன்பாடுகள் Apache தொகுதிக்கூறுகளைப் பயன்படுத்தலாம். கூடுதல் தகவலுக்கு http://www.freeipa.org/page/Web_App_Authentication.
இல் உள்ள இலக்கு அமைவின் விளக்கத்தைப் பார்க்கவும்.
பாடம் 9. பணிமேசை மற்றும் வரைவியல்
புதிய தொகுப்பு: gdk-pixbuf2
முன்னர் gtk2 தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்த gdk-pixbuf2 எனும் தொகுப்பு Red Hat Enterprise Linux 6.6 இல் சேர்க்கப்பட்டுள்ளது. gdk-pixbuf2 தொகுப்பில் புதிய பிம்ப வடிவமைப்புகளுக்காக ஏற்றப்படக்கூடிய தொகுதிக்கூறுகளின் மூலம் விரிவாக்கக்கூடிய பிம்ப ஏற்றத் தரவகம் உள்ளது. இந்தத் தரவகம் GTK+ அல்லது Clutter போன்ற கருவித் தொகுப்புகளால் பயன்படுத்தப்படும். gdk-pixbuf2 மற்றும் gtk2 தொகுப்புகளில் உள்ள தரவகங்களைத் தரமிறக்கம் செய்வது தோல்வியடையலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
பாடம் 10. செயல்திறன் மற்றும் மறுஅளவிடல் தன்மை
பெர்ஃபாமன்ஸ் கோ பைலட் (PCP)
பெர்ஃபாமன்ஸ் கோ பைலட் (PCP) கணினி அளவிலான செயல்திறன் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்திற்கு ஆதரவளிப்பதற்கான பணிச்சட்டமைப்பையும் சேவைகளையும் வழங்குகிறது. இது லேசானதும் பரவலான கட்டமைப்பு கொண்டதுமாக இருப்பதால் சிக்கலான அமைப்புகளின் மையப்படுத்தப்பட்ட பகுப்பாய்வுக்கு ஏற்றதாகிறது.
Python, Perl, C++ மற்றும் C இடைமுகங்களைப் பயன்படுத்தி செயல்திறன் தரவுகளைச் சேர்க்க முடியும். பகுப்பாய்வுக் கருவிகள் நேரடியாக கிளையன் APIகளைப் (Python, C++, C) பயன்படுத்த முடியும், உயர் நிலை வலைப் பயன்பாடுகளால், JSON இடைமுகத்தைப் பயன்படுத்தி கிடைக்கக்கூடிய அனைத்து செயல்திறன் தரவையும் கண்டறிய முடியும்.
மேலும் தகவலுக்கு, pcp மற்றும் pcp-libs-devel தொகுப்புகளில் உள்ள விரிவான கையேட்டுப் பக்கங்களைப் பார்க்கவும். pcp-doc தொகுப்பானது ஆவணமாக்கத்தை /usr/share/doc/pcp-doc/* கோப்பகத்தில் நிறுவுகிறது, இதில் அப்ஸ்ட்ரீம் திட்டப்பணியின் இந்த இரண்டு கட்டணமற்ற மற்றும் கட்டற்ற புத்தகங்களும் உள்ளடங்குகின்றன:
இப்போது Red Hat Enterprise Linux 6.6 இல், OpenJDK 8 Java இயக்கநேரச் சூழல் மற்றும் OpenJDK 8 Java மென்பொருள் உருவாக்கக் கருவித் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள java-1.8.0-openjdk தொகுப்புகள் தொழில்நுட்ப முன்னோட்டமாகக் கிடைக்கும்.
கூறு பதிப்புகள்
இந்தப் பின்னிணைப்பானது Red Hat Enterprise Linux 6.6 வெளியீட்டில் உள்ள கூறுகள் மற்றும் அவற்றின் பதிப்புகளின் பட்டியலாகும்.
கூறு
பதிப்பு
கெர்னல்
2.6.32-494
QLogic qla2xxx இயக்கி
8.07.00.08.06.6-k
QLogic ql2xxx சாதனநிரல்
ql23xx-firmware-3.03.27-3.1
ql2100-firmware-1.19.38-3.1
ql2200-firmware-2.02.08-3.1
ql2400-firmware-7.03.00-1
ql2500-firmware-7.03.00-1
Emulex lpfc இயக்கி
10.2.8020.1
iSCSI initiator utils
iscsi-initiator-utils-6.2.0.873-11
DM-Multipath
device-mapper-multipath-libs-0.4.9-80
LVM
lvm2-2.02.108-1
அட்டவணை A.1. கூறு பதிப்புகள்
மறுபார்வை வரலாறு
மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 6-2
Mon Sep 15 2014
மிலன்நவ்ராட்டில்
Red Hat Enterprise Linux 6.6 வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு.