Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 7

Release Notes

Red Hat Enterprise Linux 7.0 க்கான வெளியீட்டுக் குறிப்புகள்

பதிப்பு 0

Red Hat Engineering Content Services

சட்டஅறிக்கை

Copyright © 2014 Red Hat, Inc.
The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
MySQL® is a registered trademark of MySQL AB in the United States, the European Union and other countries.
All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
RaleighNC 27606-2072 USA
Phone: +1 919 754 3700
Phone: 888 733 4281
Fax: +1 919 754 3701

சுருக்கம்

வெளியீட்டுக் குறிப்புகளானது Red Hat Enterprise Linux 7.0 வெளியீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை ஆவணப்படுத்துகிறது. Red Hat Enterprise Linux 6 மற்றும் 7 க்கு இடையிலான மாற்றங்கள் பற்றிய விரிவான தகவலுக்கு, இடப்பெயர்ப்புத் திட்டமிடல் வழிகாட்டியைப் பார்க்கவும். அறியப்பட்ட சிக்கல்கள் தொழில்நுட்பக் குறிப்புகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இங்கு ஆன்லைனில் அமைந்துள்ள, ஆன்லைன் Red Hat Enterprise Linux 7.0 வெளியீட்டுக் குறிப்புகளே வரையறுக்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகக் கருதப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வெளியீட்டைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருப்பின், Red Hat Enterprise Linux இன் தங்கள் பதிப்புக்கான ஆன்லைன் வெளியீட்டுக் குறிப்புகளையும் தொழில்நுட்பக் குறிப்புகளையும் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒப்புகை
Red Hat உலகளாவிய ஆதரவு சேவைகள், Red Hat Enterprise Linux 7 ஐ சோதனை செய்வதில் தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ஸ்டெர்லிங் அலெக்ஸான்டர் மற்றும் மைக்கேல் எவெரெட் ஆகியோருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
1. அறிமுகம்
2. கட்டமைப்புகள்
3. திறப்பாடுகளும் வரம்புகளும்
4. தொகுப்பு மற்றும் ஆதரவு மாற்றங்கள்
5. நிறுவலும் பூட்டிங்கும்
6. சேமிப்பகம்
7. கோப்பு முறைகள்
8. கெர்னல்
9. மெய்நிகராக்கம்
10. கணினி மற்றும் சேவைகள்
11. க்ளஸ்டரிங்
12. கம்பைலர் மற்றும் கருவிகள்
13. பிணையமாக்கல்
14. வள நிர்வாகம்
15. அங்கீகாரம் மற்றும் இடைசெயல் தன்மை
16. பாதுகாப்பு
17. சந்தா நிர்வாகம்
18. பணிமேடை
19. இணைய சேவையகங்கள் மற்றும் சேவைகள்
20. ஆவணமாக்கம்
21. சர்வதேசமயமாக்கல்
22. ஆதரிக்கக்கூடிய தன்மை மற்றும் பராமரிப்பு
A. மீள்பார்வைவரலாறு

பாடம் 1. அறிமுகம்

இப்போது Red Hat Enterprise Linux 7.0 கிடைக்கும் என்பதை Red Hat பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. Red Hat Enterprise Linux 7.0 ஆனது Red Hat இன் விரிவான இயக்க முறைமைகளின் தொகுப்பாகும், இது மிக முக்கியமான தொழிற்துறை கணினியியலுக்காக உருவாக்கப்பட்டது, மேலும் இது சிறந்த தொழிற்துறை மென்பொருள் மற்றும் வன்பொருள் விற்பனை நிறுவனங்களால் சான்றளிக்கப்பட்டது.

பாடம் 2. கட்டமைப்புகள்

பின்வரும் கட்டமைப்புகளில், Red Hat Enterprise Linux 7.0 ஆனது ஒற்றை கருவித் தொகுப்பாக கிடைக்கும்[1]:
  • 64-பிட் AMD
  • 64-பிட் Intel
  • IBM POWER7 மற்றும் POWER8
  • IBM System z [2]
இந்த வெளியீட்டில், Red Hat சேவையகம், கணினிகள் மற்றும் ஒட்டுமொத்த Red Hat திறமூல அனுபவத்தில் பல மேம்பாடுகளை வழங்குகிறது.


[1] Red Hat Enterprise Linux 7.0 நிறுவலானது 64-பிட் வன்பொருளில் மட்டுமே ஆதரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Red Hat Enterprise Linux 7.0 ஆல் Red Hat Enterprise Linux இன் முந்தைய பதிப்புகள் உட்பட, 32-பிட் இயக்க முறைமைகளை மெய்நிகர் கணினிகளாக இயக்க முடியும்.
[2] Red Hat Enterprise Linux 7.0 IBM zEnterprise 196 வன்பொருள் அல்லது பிந்தையதை ஆதரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பாடம் 3. திறப்பாடுகளும் வரம்புகளும்

பின்வரும் அட்டவணையில், அதன் முந்தைய 5 மற்றும் 6 ஆகிய பதிப்புகளுடன் ஒப்பிடுகையில் Red Hat Enterprise Linux 7 இன் திறப்பாடுகள் மற்றும் வரம்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அட்டவணை 3.1. Red Hat Enterprise Linux பதிப்பு 5, 6 மற்றும் 7 இன் வரம்புகள்

Red Hat Enterprise Linux 5 Red Hat Enterprise Linux 6 Red Hat Enterprise Linux 7
அதிகபட்ச தருக்கவியல் CPUகள்    
x86_64 160/255 160/4096 160/5120
POWER 128/128 128 மதிப்பாய்வில் உள்ளது
System z 101 (zEC12) 101 (zEC12) மதிப்பாய்வில் உள்ளது
அதிகபட்ச நினைவகம்    
x86_64 1 TB 3 TB ஆதரிக்கப்படும்/64 TB 3 TB ஆதரிக்கப்படும்/64 TB
POWER 512 GB குறைந்தபட்சம்/1 TB பரிந்துரைக்கப்படுகிறது 2 TB 2 TB
System z 3 TB (z196) 3 TB (z196) 3 TB (z196)
குறைந்தபட்ச தேவைகள்    
x86_64 512 MB குறைந்தபட்சம்/ஒரு தருக்கவியல் CPU க்கு 1 GB பரிந்துரைக்கப்படுகிறது 1 GB குறைந்தபட்சம்/ஒரு தருக்கவியல் CPU க்கு 1 GB பரிந்துரைக்கப்படுகிறது 1 GB குறைந்தபட்சம்/ஒரு தருக்கவியல் CPU க்கு 1 GB பரிந்துரைக்கப்படுகிறது
POWER 1 GB/2 GB பரிந்துரைக்கப்படுகிறது 2 GB/Red Hat Enterprise Linux நிறுவல் ஒன்றுக்கு 2 GB 2 GB/Red Hat Enterprise Linux நிறுவல் ஒன்றுக்கு 2 GB
System z 512 MB 512 MB 1 GB[a]
கோப்பு முறைமைகளும் சேமிப்பக வரம்புகளும்    
அதிகபட்ச கோப்பு அளவு: XFS 16 TB 16 TB 16 TB
அதிகபட்ச கோப்பு அளவு: ext4 16 TB 16 TB 50 TB
அதிகபட்ச கோப்பு அளவு: Btrfs பொருந்தாது மதிப்பாய்வில் உள்ளது மதிப்பாய்வில் உள்ளது
அதிகபட்ச கோப்பு முறைமை அளவு: XFS 100 TB[b] 100 TB 500 TB
அதிகபட்ச கோப்பு முறைமை அளவு: ext4 16 TB 16 TB 50 TB
அதிகபட்ச கோப்பு முறைமை அளவு: Btrfs பொருந்தாது மதிப்பாய்வில் உள்ளது 50 TB
அதிகபட்ச பூட் LUN அளவு 2 TB 16 TB[c] 50 TB
ஒரு செயலிக்கான அதிகபட்ச முகவரி அளவு: x86_64 2 TB 128 TB 128 TB
     
[a] IBM System z இல் நிறுவ 1 GB க்கு அதிக நினைவகம் பரிந்துரைக்கப்படுகிறது.
[b] Red Hat Enterprise Linux பதிப்பு 5.5 அல்லது சமீபத்திய பதிப்பு XFS அதிகபட்ச கோப்பு முறைமை அளவாக 100 TB வரை ஆதரிக்கும்.
[c] 2 TB க்கும் அதிகமான பூட் LUN ஆதரவுக்கு UEFI மற்றும் GPT ஆதரவு தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பாடம் 4. தொகுப்பு மற்றும் ஆதரவு மாற்றங்கள்

கைவிடப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட தொகுப்புகள் மற்றும் இயக்கிகளின் பின்வரும் அட்டவணைகள் Red Hat Enterprise Linux 7.0 இன் வெளியீட்டுடன் கண்டிப்பாக தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன, மேலும் Red Hat Enterprise Linux 7.0 க்கு Red Hat இன் தன்விருப்பத்தின் பேரில் மாற்றப்படலாம்.

4.1. வழக்கழிந்த தொகுப்புகள்

Red Hat Enterprise Linux 7.0 இல் பின்வரும் செயலம்சங்களும் திறப்பாடுகளும் கைவிடப்பட திட்டமிடப்பட்டுள்ளன, மேலும் தயாரிப்பின் எதிர்கால பதிப்புகளில் அவை நீக்கப்படலாம். தகுந்தவற்றுக்கு மாற்றுத் திறப்பாடுகள் கீழே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 4.1. வழக்கழிந்த தொகுப்புகள்

செயலம்சம்/தொகுப்பு மாற்று இடப்பெயர்ப்புக் குறிப்புகள்
ext2, ext3 கோப்பு முறைமை ஆதரவு ext4 ext2 மற்றும் ext3 கோப்பு முறைமைகளுக்கு ext4 குறியீடு பயன்படுத்தப்படலாம்
sblim-sfcb tog-pegasus
பழைய RHN ஹோஸ்ட் செய்யும் பதிவு subscription-manager மற்றும் சந்தா சொத்து நிர்வாகி
acpid systemd
evolution-mapi evolution-ews Microsoft Exchange Server 2003 கணினிகளில் இருந்து இடப்பெயர்ப்பு செய்யவும்
gtkhtml3 webkitgtk3
sendmail postfix
edac-utils மற்றும் mcelog rasdaemon
libcgroup systemd cgutils Red Hat Enterprise Linux 7.0 இல் தொடர்ந்து இடம்பெறும், ஆனால் systemd ஆனது பிந்தைய வெளியீடுகளில் வாடிக்கையாளர்கள் இடப்பெயர்ப்பு செய்வதற்கான திறப்பாடுகளைக் கொண்டுள்ளதாக மேம்படுகிறது
krb5-appl openssh OpenSSH மிக செயல்மிகு முறையில் பராமரிக்கப்படும் தரநிலைகளைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்ட மற்றும் மிக செயல்மிகு முறையில் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற குறியீட்டுத் தளத்திலுள்ள, செயலம்சத்தில் ஒத்த கருவிகளைக் கொண்டுள்ளது.
lvm1 lvm2
lvm2mirror மற்றும் cmirror lvm2 raid1 lvm2 raid1 கிளஸ்ட்டர்களை ஆதரிக்காது. cmirror ஐ மாற்றும் திட்டமில்லை.

4.2. நீக்கப்பட்ட தொகுப்புகள்

இந்தப் பிரிவில் Red Hat Enterprise Linux 6 உடன் ஒப்பிடுகையில் Red Hat Enterprise Linux 7 இல் இருந்து நீக்கப்பட்ட தொகுப்புகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 4.2. நீக்கப்பட்ட தொகுப்புகள்

செயலம்சம்/தொகுப்பு மாற்று இடப்பெயர்ப்புக் குறிப்புகள்
gcj OpenJDK gcj ஐக் கொண்டு Java பயன்பாடுகளை பூர்வீக குறியீட்டுக்கு கம்பைல் செய்ய வேண்டாம்.
நிறுவல் கட்டமைப்புகளாக 32-பிட் கட்டமைப்புகள் 64-பிட் கட்டமைப்புகள் பயன்பாடுகள் தொடர்ந்து இணக்க தரவகங்களுடன் இயங்கும். உங்கள் பயன்பாடுகளை 64-பிட் Red Hat Enterprise Linux 6 இல் சோதிக்கவும். 32-பிட் பூட் ஆதரவு தேவைப்பட்டால், Red Hat Enterprise Linux 6 ஐ தொடர்ந்து பயன்படுத்தவும்.
IBM POWER6 ஆதரவு ஒன்றுமில்லாத Red Hat Enterprise Linux 5 அல்லது 6 ஐ தொடர்ந்து பயன்படுத்தவும்.
Matahari CIM-அடிப்படையிலான நிர்வாகம் Red Hat Enterprise Linux 6.4 இல் இருந்து Matahari நீக்கப்பட்டது. அதைப் பயன்படுத்த வேண்டாம்.
ecryptfs முன்பே உள்ள LUKS அல்லது dm-crypt ப்ளாக்-அடிப்படையிலான மறைகுறியாக்கத்தைப் பயன்படுத்தவும் இடப்பெயர்ப்பு கிடைக்கவில்லை; பயனர்கள் மறைகுறியாக்கம் செய்த தரவை மீண்டும் உருவாக்க வேண்டும்.
TurboGears2 வலைப் பயன்பாடு ஸ்டேக் ஒன்றுமில்லாத
OpenMotif பதிப்பு 2.2 Motif 2.3 பயன்பாடுகளை Red Hat Enterprise Linux 6 இல் உள்ள தற்போதைய Motif பதிப்புக்கு எதிராக மீண்டும் பில்ட் செய்யவும்.
webalizer வலைப் பகுப்பாய்வுக் கருவி ஒன்றுமில்லாத
compiz சாளர நிர்வாகி gnome-shell
Eclipse உருவாக்குநர் கருவித்தொகுப்பு ஒன்றுமில்லாத இப்போது Eclipse ஆனது Red Hat உருவாக்குநர் கருவித்தொகுப்பு வழங்கலில் வழங்கப்படுகிறது.
Qpid மற்றும் QMF ஒன்றுமில்லாத Qpid மற்றும் QMF ஆகியவை MRG வழங்கலில் கிடைக்கும்.
amtu ஒன்றுமில்லாத பொது தேர்வளவை சான்றிதழ்களுக்கு இனி இந்தக் கருவி தேவைப்படாது.
system-config-services systemadm
pidgin முன்புலங்கள் empathy
perl-suidperl இன்ட்டர்பிரட்டர் ஒன்றுமில்லாத இந்த செயலம்சம் அப்ஸ்ட்ரீம் perl இல் இனி கிடைக்காது.
pam_passwdqc, pam_cracklib pam_pwquality
HAL தரவகம் மற்றும் டீமான் udev
ConsoleKit தரவகம் மற்றும் டீமான் systemd http://www.freedesktop.org/wiki/Software/systemd/writing-display-managers
DeviceKit-power upower
system-config-lvm gnome-disk-utility மற்றும் system-storage-manager gnome-disk-utility தொகுப்பும் Red Hat Enterprise Linux 6 இல் உள்ளது. system-storage-manager ஐ எளிய பணிகளுக்கும் lvm2 கட்டளையை ஃபைன் டியூனிங் மற்றும் LVM தொடர்பான அதிக சிக்கலான செயல்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
system-config-network nm-connection-editor, nmcli nm-connection-editor தொகுப்பும் Red Hat Enterprise Linux 6 இல் உள்ளது.
taskjuggler ஒன்றுமில்லாத
thunderbird evolution
vconfig iproute vconfig அம்சங்கள் அனைத்தும் iproute தொகுப்பிலிருந்து ip கருவியால் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு ip-link(8) உதவிப் பக்கத்தைப் பார்க்கவும்.
பலவகையான பழைய கிராஃபிக் இயக்கிகள் நவீன வன்பொருள் அல்லது vesa இயக்கி
xorg-x11-twm ஒன்றுமில்லாத
xorg-x11-xdm gdm
system-config-firewall firewall-config மற்றும் firewall-cmd system-config-firewall ஆனது iptables சேவைகளுடன், நிலையான-மட்டும் சூழல்களுக்கான மாற்று ஃபயர்வால் தீர்வின் ஒரு பகுதியாக இப்போதும் கிடைக்கும்.
mod_perl mod_fcgid mod_perl HTTP 2.4 உடன் இணக்கமற்றது
busybox ஒன்றுமில்லாத
prelink ஒன்றுமில்லாத prelink Red Hat Enterprise Linux 7.0 இல் வழங்கப்பட்டது, ஆனால் முன்னிருப்பாக அது முடக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
KVM மற்றும் மெய்நிகராக்க தொகுப்புகள் (ComputeNode வகைபதிப்பில்) KVM மற்றும் மெய்நிகராக்க அம்சமுள்ள, சேவையக வகை பதிப்பு போன்ற வகைபதிப்பு
module-init-tools kmod
kernel-firmware-* linux-firmware
flight-recorder எதுவுமில்லை
wireless-tools கட்டளைவரிக் கருவியிலிருந்து அடிப்படை வயர்லெஸ் சாதன கையாளுதல் செயல்களைச் செய்ய, iw தொகுப்பிலிருந்து iw பைனரியைப் பயன்படுத்தவும்.
libtopology hwloc
digikam ஒன்றுமில்லாத சிக்கலான சார்புத்தொகுதிகளின் காரணமாக digiKam புகைப்பட நிர்வாக நிரல் Red Hat Enterprise Linux 7.0 மென்பொருள் சேனல்களில் கிடைக்காது.
NetworkManager-openswan NetworkManager-libreswan
KDE Display Manager, KDM GNOME Display Manager, GDM Red Hat Enterprise Linux 7.0 இல் GNOME Display Manager முன்னிருப்பு காட்சி நிர்வாகியாகும். இப்போதும் KDE (K டெஸ்க்ட்டாப் சூழல்) கிடைக்கும், ஆதரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
virt-tar virt-tar-in மற்றும் virt-tar-out கட்டளைவரிக் கருவி தொடரியல் மாற்றப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் தகவலுக்கு உதவிப் பக்கங்களைப் பார்க்கவும்.
virt-list-filesytems virt-filesystems கட்டளைவரிக் கருவி தொடரியல் மாற்றப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் தகவலுக்கு உதவிப் பக்கங்களைப் பார்க்கவும்.
virt-list-partitions virt-filesystems கட்டளைவரிக் கருவி தொடரியல் மாற்றப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் தகவலுக்கு உதவிப் பக்கங்களைப் பார்க்கவும்.

4.3. கைவிடப்பட்ட இயக்கிகளும் தொகுதிக்கூறுகளும்

பின்வரும் இயக்கிகளும் தொகுதிக் கூறுகளும் Red Hat Enterprise Linux 7.0 இல் கைவிடப்பட்டுள்ளன, மேலும் அவை Red Hat Enterprise Linux இன் எதிர்கால வெளியீடுகளில் நீக்கப்படலாம்.
கிராஃபிக்ஸ் இயக்கிகள்
xorg-x11-drv-ast
xorg-x11-drv-cirrus
xorg-x11-drv-mach64
xorg-x11-drv-mga
xorg-x11-drv-openchrome
மேலே குறிப்பிட்ட கிராஃபிக் இயக்கிகள் அனைத்துக்கும் பதிலாக கெர்னல் முறைமை அமைவு (KMS) இயக்கிகள் இடம்பெற்றுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.
உள்ளீடு இயக்கிகள்
xorg-x11-drv-void
சேமிப்பக இயக்கிகள்
3w-9xxx
arcmsr
aic79xx
Emulex lpfc820

4.4. தொடராமல் விட்ட கெர்னல் இயக்கிகள், தொகுதிக் கூறுகள் மற்றும் அம்சங்கள்

இந்தப் பிரிவில், Red Hat Enterprise Linux 6 உடன் ஒப்பிடுகையில் Red Hat Enterprise Linux 7.0 இல் இருந்து நீக்கப்பட்ட இயக்கிகள் மற்றும் தொகுதிக் கூறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சேமிப்பக இயக்கிகள்
megaraid_mm
cciss[3]
aic94xx
aic7xxx
i2o
ips
megaraid_mbox
mptlan
mptfc
sym53c8xx
ecryptfs
3w-xxxx
பிணையமாக்கல் இயக்கிகள்
3c59x
3c574_cs
3c589_c
3c589_cs
8390
acenic
amd8111e
at76c50x-usb
ath5k
axnet_cs
b43
b43legacy
can-dev
cassini
cdc-phonet
cxgb
de4x5
de2104x
dl2k
dmfe
e100
ems_pci
ems_usb
fealnx
fmvi18x_cs
fmvj18x_cs
forcedeth
ipw2100
ipw2200
ixgb
kvaser_pci
libertas
libertas_tf
libertas_tf_usb
mac80211_hwsim
natsemi
ne2k-pci
niu
nmckan_cs
nmclan_cs
ns83820
p54pci
p54usb
pcnet32
pcnet_32
pcnet_cs
pppol2tp
r6040
rt61pci
rt73usb
rt2400pci
rt2500pci
rt2500usb
rtl8180
rtl8187
s2io
sc92031
sis190
sis900
sja1000
sja1000_platform
smc91c92_cs
starfire
sundance
sungem
sungem_phy
sunhme
tehuti
tlan
tulip
typhoon
uli526x
vcan
via-rhine
via-velocity
vxge
winbond-840
xirc2ps_cs
xircom_cb
zd1211rw
கிராஃபிக்ஸ் இயக்கிகள்
xorg-x11-drv-acecad
xorg-x11-drv-aiptek
xorg-x11-drv-elographics
xorg-x11-drv-fpit
xorg-x11-drv-hyperpen
xorg-x11-drv-mutouch
xorg-x11-drv-penmount
உள்ளீடு இயக்கிகள்
xorg-x11-drv-acecad
xorg-x11-drv-aiptek
xorg-x11-drv-elographics
xorg-x11-drv-fpit
xorg-x11-drv-hyperpen
xorg-x11-drv-mutouch
xorg-x11-drv-penmount


[3] பின்வரும் கன்ட்ரோலர்கள் இனி ஆதரிக்கப்படாது:
  • Smart Array 5300
  • Smart Array 5i
  • Smart Array 532
  • Smart Array 5312
  • Smart Array 641
  • Smart Array 642
  • Smart Array 6400
  • Smart Array 6400 EM
  • Smart Array 6i
  • Smart Array P600
  • Smart Array P800
  • Smart Array P400
  • Smart Array P400i
  • Smart Array E200i
  • Smart Array E200
  • Smart Array E500
  • Smart Array P700M

பாடம் 5. நிறுவலும் பூட்டிங்கும்

5.1. நிறுவி

Red Hat Enterprise Linux நிறுவி Anaconda, Red Hat Enterprise Linux 7 க்கான நிறுவல் செயலை மேம்படுத்துவதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இடைமுகம்

  • Anaconda இல், IBM S/390, டைப்ரைட்டர் முனையங்களில் செயல்படக்கூடிய ஒரு புதிய உரைப் பயன்முறை இடம்பெற்றுள்ளது, இதனை எழுத மட்டும் கூடியதாகவும் பயன்படுத்த முடியும்.
  • Anaconda இல் இப்போது நவீன மற்றும் சிறப்பான ஹப்-அன்ட்-ஸ்போக் இன்ட்டர்செக்ஷன் மாடலைப் பயன்படுத்தும் ஒரு புதிதாக வடிவமைக்கபப்ட்ட பயனர் இடைமுகம் உள்ளது.
  • Anaconda நிறுவியின் l10n (உள்ளூர்மயமாக்கல்) ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • firstboot பயன்பாடு தொடக்க அமைவைப் பார்த்துக்கொள்கிறது.

சேமிப்பகம்

  • நேரடியாக வடிவமைக்கப்பட்ட பிரிவாக்கம் செய்யப்படாத சாதனங்கள் ஆதரிக்கப்படும்.
  • இப்போது தற்காலிக கோப்பு சேமிப்பு வசதியான tmpfs ஐ நிறுவலின் போது அமைவாக்கம் செய்ய முடியும்.
  • இப்போது LVM தின் ப்ரொவிஷனிங் ஆதரிக்கப்படுகிறது.
  • இப்போது Btrfs கோப்பு முறைமை தொழில்நுட்ப முன்னோட்டமாக ஆதரிக்கப்படுகிறது.

பிணையமாக்கல்

பிணையமாக்கல் அம்சங்களில் அணியாக்கம், பிணைப்பாக்கம் மற்றும் NTP (பிணைய நேர நெறிமுறை) அமைவாக்கம் ஆகியவற்றுக்கான ஆதரவு அடங்கும். மேலும் விவரங்களுக்கு பாடம் 13, பிணையமாக்கல் ஐப் பார்க்கவும்.

உருவாக்குநர் கருவி

  • இப்போது Anaconda ஒரு மேம்படுத்தப்பட்ட makeupdates ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்துகிறது.

மற்ற அம்சங்கள்

  • இப்போது ஜியோலொக்கேஷன் ஆதரிக்கப்படுகிறது: மொழியும் நேர மண்டலமும் GeoIP இலிருந்து முன்பே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
  • இப்போது திரைப்பிடிப்புகள் முழு அளவில் ஆதரிக்கப்படுகின்றன.
  • இப்போது Anaconda துணை நிரல்களை ஆதரிக்கிறது.
  • loader பைனரிக்கு பதிலாகdracut தொகுதிக்கூறுகள் இடம்பெற்றுள்ளன.
  • realmd DBus சேவை kickstart இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
Red Hat Enterprise Linux 7.0 நிறுவல் வழிகாட்டி நிறுவி மற்றும் நிறுவல் செயல் குறித்த விரிவான ஆவணமாக்கத்தை வழங்குகிறது.

5.2. பூட்டை ஏற்றி

GRUB 2

Red Hat Enterprise Linux 7.0 இல் GRUB 2 எனும் புதிய பூட் லோடர் உள்ளது, இது அதற்கு முன்பிருந்த, Red Hat Enterprise Linux 6 பயன்படுத்திய GRUB ஐ விட மிக வலிமையானதும் எளிதில் இடமாற்றக்கூடியதும் சக்தி வாய்ந்ததுமாகும். GRUB 2 பல அம்சங்களையும் மேம்பாடுகளையும் வழங்குகிறது, அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
  • இப்போது GRUB 2, 64-பிட் Intel மற்றும் AMD கட்டமைப்புகளுடன் கூடுதலாக PowerPC உள்ளிட்ட பல இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
  • GRUB 2 BIOS, EFI மற்றும்OpenFirmware ஆகியவை உட்பட கூடுதல் சாதனநிரல் வகைகளை ஆதரிக்கிறது.
  • GRUB 2, மாஸ்ட்டர் பூட் ரெக்கார்டு (MBR) பிரிவாக்க அட்டவணைகளை ஆதரிப்பதுடன் GUID பிரிவாக்க அட்டவணைகளையும் (GPT) ஆதரிக்கிறது.
  • GRUB 2, Linux கோப்பு முறைமைகள் மட்டுமின்றி Apple Hierarchical File System Plus (HFS+) மற்றும் Microsoft இன் NTFS கோப்பு முறைமை போன்ற Linux அல்லாத கோப்பு முறைமைகளையும் ஆதரிக்கிறது.

பாடம் 6. சேமிப்பகம்

LIO கெர்னல் இலக்கு உபமுறைமை

Red Hat Enterprise Linux 7.0 ஆனது LIO கெர்னல் இலக்கு உபமுறைமையைப் பயன்படுத்துகிறது, இது பின்வரும் அனைத்து சேமிப்பக ஃபேப்ரிக்குகளுக்கும், பிளாக் சேமிப்பகத்திற்கான தரநிலையான திற மூல SCSI இலக்காகும்: FCoE, iSCSI, iSER (மெல்லனாக்ஸ் இன்ஃபினிபேன்ட்) மற்றும் SRP (மெல்லனாக்ஸ் இன்ஃபினிபேன்ட்).
Red Hat Enterpise Linux 6, iSCSI இலக்கு ஆதரவுக்காக, SCSI இலக்கு டீமானான tgtd ஐப் பயன்படுத்துகிறது, மேலும் அது fcoe-target-utils தொகுப்பின் மூலமாக, ஈத்தர்நெட் இலக்குகள் வழியே ஃபைபர் சேனலுக்கு (FCoE), Linux கெர்னல் இலக்கான LIO ஐ மட்டுமே பயன்படுத்துகிறது.
targetcli ஷெல்லானது, LIO Linux SCSI இலக்குக்கான பொதுவான நிர்வாக இயங்குதளத்தை வழங்குகிறது.

மெதுவான பிளாக் சாதனங்களை தேக்ககப்படுத்தும் வேகமான பிளாக் சாதனங்கள்

Red Hat Enterprise Linux 7.0 இல் மெதுவான பிளாக் சாதனங்களுக்கான தேக்ககமாக வேகமான பிளாக் சாதனங்களைப் பயன்படுத்தும் அம்சம் ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தினால், ஒரு PCIe SSD சாதனம் நேரடி இணைவு சேமிப்பகம் (DAS) அல்லது சேமிப்பகப் பரப்பு பிணைய (SAN) சேமிப்பகத்திற்கான தேக்ககமாக செயல்பட முடியும், இது கோப்பு முறைமை செயல்திறனை மேம்படுத்துகிறது.

LVM தேக்ககம்

Red Hat Enterprise Linux 7.0 LVM தேக்ககத்தை தொழில்நுட்ப முன்னோட்டமாக அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள், சிறிய வேகமான சாதனத்தை பெரிய மெதுவான சாதனங்களுக்கு தேக்ககமாகப் பயன்படுத்தக்கூடிய தருக்கவியல் தொகுதிகளை உருவாக்க முடியும். தேக்கக தருக்கவியல் தொகுதிகளை உருவாக்குவது பற்றிய தகவலுக்கு lvm(8) உதவிப்பக்கத்தைப் பார்க்கவும்.
இப்போது தேக்கக தருக்கவியல் தொகுதிகளில் பின்வரும் கட்டளைகள் அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்:
  • pvmove: இது தேக்கக தருக்கவியல் தொகுதியைத் தவிர்க்கும்,
  • lvresize, lvreduce, lvextend: தற்போது தேக்கக தருக்கவியல் தொகுதிகளை மறுஅளவு செய்ய முடியாது,
  • vgsplit: ஒரு தொகுதிக் குழுவில் தேக்கக தருக்கவியல் தொகுதிகள் இருக்கும் நிலையில் தொகுதிக் குழுவைப் பிரிக்க அனுமதியில்லை.

libStorageMgmt API உடனான சேமிப்பக தரவணி நிர்வாகம்

Red Hat Enterprise Linux 7.0 சேமிப்பக தரவணி நிர்வாகத்தை ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக அறிமுகப்படுத்துகிறது. libStorageMgmt என்பது சேமிப்பக தரவணி சார்பற்ற பயன்பாட்டு நிரலாக்க இடைமுகமாகும் (API). அது நிலையான மற்றும் இசைவான API ஐ வழங்குகிறது, அதைக் கொண்டு உருவாக்குநர்கள் பல்வேறு சேமிப்பக தரவணிகளை நிரலாக்க முறையில் நிர்வகிக்க முடியும், வழங்கப்படும் வன்பொருள் முடுக்க அம்சத்தையும் மேம்படுத்த முடியும். கணினி நிர்வாகிகள், உள்ளடக்கப்பட்டுள்ள கட்டளைமுறை இடைமுகத்தைக் (CLI) கொண்டு, சேமிப்பகத்தை கைமுறையாக நிர்வகிக்கவும் சேமிப்பக நிர்வாகப் பணிகளை தானியக்கமாக்கவும் ஒரு கருவியாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

LSI Synchro க்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 7.0 இல், megaraid_sas இயக்கியில் ஒரு குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது, அது LSI Syncro CS அதிகம் கிடைக்கும் தன்மை கொண்ட நேரடி இணைவு சேமிப்பக (HA-DAS) அடாப்ட்டர்களை இயக்குகிறது. முன்பு இயக்கப்பட்டுள்ள அடாப்ட்டர்களுக்கு megaraid_sas இயக்கி முழுமையாக ஆதரிக்கப்படும், இந்நிலையில் Syncro CS க்கு இந்த இயக்கியைப் பயன்படுத்தும் அம்சம், தொழில்நுட்ப முன்னோட்டமாக கிடைக்கிறது. இந்த அடாப்ட்டருக்கான ஆதரவு LSI, உங்கள் கணினி ஒருங்கிணைப்பாளர் அல்லது கணினி விற்பனையாளரால் நேரடியிஆக வழங்கப்படும். Red Hat Enterprise Linux 7.0 இல் Syncro CS ஐ தயாரமைப்பு செய்துள்ள பயனர்கள் Red Hat மற்றும் LSI க்கு தங்கள் கருத்துகளைப் பகிரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். LSI Syncro CS தீர்வுகள் பற்றிய மேலும் தகவலுக்கு, http://www.lsi.com/products/shared-das/pages/default.aspx ஐப் பார்க்கவும்.

LVM பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்

Red Hat Enterprise Linux 7.0 இல் புதிய LVM பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக இடம்பெற்றுள்ளது. இந்த API ஆனது LVM இன் சில குறிப்பிட்ட அம்சங்களை வினவவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

DIF/DIX ஆதரவு

Red Hat Enterprise Linux 7.0 இல், SCSI தரநிலையில் தொழில்நுட்ப முன்னோட்டமாக DIF/DIX புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. DIF/DIX ஆனது பொதுவாகப் பயன்படுத்தப்படும் 512-பைட் வட்டு பிளாக்கின் அளவை 512 இலிருந்து 520 பைட்டாக அதிகரிக்கிறது, இது தரவு முழுமைத்தன்மைப் புலத்தை (DIF) சேர்க்கிறது. DIF ஆனது, எழுதுதல் செயல் நிகழும் போது, தரவு பிளாக்குக்காக வழங்கி பஸ் அடாப்ட்டரால் (HBA) கணக்கிடப்படும் ஒரு செக்ஸம் மதிப்பை சேமிக்கிறது. பிறகு சேமிப்பக சாதனம் பெறும் போது செக்ஸமை உறுதிப்படுத்தி, தரவு மற்றும் செக்ஸம் இரன்டையும் சேமிக்கிறது. மாறாக, வாசிப்பு நிகழும் போது, செக்ஸமானது சேமிப்பக சாதனத்தாலும் பெறும் HBA ஆலும் சோதிக்கப்படலாம்.
மேலும் தகவலுக்கு, சேமிப்பக நிர்வாக வழிகாட்டியில் உள்ள DIF/DIX செயல்படுத்தப்பட்ட பிளாக் சாதனங்கள் எனும் பிரிவைப் பார்க்கவும்.

இணை NFS க்கான ஆதரவு

இணை NFS (pNFS) என்பது NFS v4.1 தரநிலையின் ஒரு பகுதியாகும், அது கிளையன்கள் சேமிப்பக சாதனங்களை நேரடியாகவும் இணையாகவும் அணுக அனுமதிக்கிறது. pNFS கட்டமைப்பானது சில பொதுவான பணிச்சுமைகளுக்கு, NFS சேவையகங்களின் அளவுமாற்றத் தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்தக்கூடும்.
pNFS, 3 வெவ்வேறு சேமிப்பக நெறிமுறைகள் அல்லது தளவமைப்புகளை வரையறுக்கிறது: கோப்புகள், பொருள்கள் மற்றும் பிளாக்குகள். Red Hat Enterprise Linux 7.0 கிளையனானது கோப்புகள் தளவமைப்பை முழுமையாக ஆதரிக்கிறது, பிளாக்குகள் மற்றும் பொருள் தளவமைப்புகள் தொழில்நுட்ப முன்னோட்டமாக ஆதரிக்கப்படுகின்றன.
pNFS பற்றிய மேலும் தகவலுக்கு, http://www.pnfs.com/ ஐப் பார்க்கவும்.

பாடம் 7. கோப்பு முறைகள்

XFS கோப்பு முறைமை ஆதரவு

இப்போது Red Hat Enterprise Linux 7.0 இன் Anaconda-அடிப்படையிலான நிறுவலுக்கான முன்னிருப்பு கோப்பு முறைமை XFS ஆகும், இது Red Hat Enterprise Linux 6 இல் முன்னிருப்பாகப் பயன்படுத்தப்பட்ட Fourth Extended கோப்புமுறைமைக்கு (ext4) பதிலாக இடம்பெற்றுள்ளது. XFS க்கு மாற்றாகext4 மற்றும் Btrfs (B-Tree) கோப்பு முறைமை பயன்படுத்தப்படலாம்.
XFS அதிக அளவுமாற்றத் தன்மை கொண்ட, உயர் செயல்திறன் கொண்ட கோப்பு முறைமையாகும், அது முதலில் சிலிக்கான் கிராஃபிக்ஸ் இங்க் நிறுவனத்தில் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இது 16 எக்ஸாபைட்டுகள் (தோராயமாக 16 மில்லியன் டெராபைட்டுகள்) வரையிலான கோப்புகளையும், 8 எக்ஸாபைட்டுகள் (தோராயமாக 8 மில்லியன் டெராபைட்டுகள்) வரையிலான கோப்புகளையும் பல மில்லியன் உள்ளீடுகளைக் கொண்ட கோப்பக கட்டமைப்புகளையும் ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. XFS மீத்தரவு இதழிடலை ஆதரிக்கிறது, இவ்வசதி விரைவான செயலிழப்பு மீட்புக்கு உதவுகிறது. XFS கோப்பு முறைமைகள் மவுன்ட் செய்யப்பட்டு செயலில் இருக்கும் போதே டிஃப்ராக்மன்ட் செய்யப்பட்டு விரிவாக்கப்பட முடியும்.
ext4 மற்றும் XFS ஆகியவற்றிலான பொதுவான பணிகளுக்குப் பயன்படும் கட்டளைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய தகவலுக்கு, நிறுவல் வழிகாட்டியில் உள்ள குறிப்பு அட்டவணையைப் பார்க்கவும்.

IBM System z க்கு libhugetlbfs ஆதரவு

இப்போது IBM System z கட்டமைப்பில், libhugetlbfs தரவகம் ஆதரிக்கப்படுகிறது. இத்தரவகம் C மற்றும் C++ நிரல்களில் உள்ள பெரிய பக்கங்களை வெளிப்படையாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. மாற்றங்கள் அல்லது மறுகம்பைலாக்கம் செய்யும் தேவையில்லாமலே செயல்திறன் மேம்பாடு அல்லது பெரிய பக்கங்களைப் பெற்று பயன்பாடுகளும் மிடில்வேர் நிரல்களும் நன்மையடைய முடியும்.

பாடம் 8. கெர்னல்

Red Hat Enterprise Linux 7.0 இல் kernel பதிப்பு 3.10 சேர்க்கப்பட்டுள்ளது. இது பல புதிய அம்சங்களை வழங்குகிறது, அவற்றில் குறிப்பிடத்தக்கவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பெரிய கிராஷ்கெர்னல் அளவுகளுக்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 7.0 ஆனது அதிக நினைவகம் (3TB வரை) கொண்ட கணினிகளில் kdump செயலிழப்பு டம்ப்பிங் இயங்கம்சத்தை ஆதரிக்கிறது.

1 க்கும் அதிகமான CPU கொண்ட கிராஷ்கெர்னல்

Red Hat Enterprise Linux 7.0 ஒன்றுக்கு மேற்பட்ட CPU க்களைக் கொண்டு கிராஷ்கெர்னலை பூட் செய்யும் வசதியை அளிக்கிறது. இந்த செயலம்சமானது ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக ஆதரிக்கப்படுகிறது.

ஸ்வேப் நினைவக அமுக்கம்

Red Hat Enterprise Linux 7.0 ஸ்வேப் நினைவக அமுக்கம் எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. ஸ்வேப் அமுக்க செயலானது முன்னோக்கு ஸ்வேப் செயலுக்கான மெலிதான பின்புல முறைமையான zswap இன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்வேப் நினைவக அமுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் கணிசமான I/O குறைப்பும் செயல்திறன் ஆதாயங்களும் கிடைக்கின்றன.

NUMA-உணர்வுள்ள நேரத்திட்டமிடலும் நினைவக ஒதுக்கீடும்

Red Hat Enterprise Linux 7.0 இல், சீரற்ற நினைவக அணுகல் (NUMA) கொண்ட கணினிகளில், செயல்திறனை மேம்படுத்துவதற்காக கெர்னலானது செயல்முறைகளையும் நினைவகத்தையும் NUMA கனுக்களுக்கிடையே தானாக இடமாற்றுகிறது.

APIC மெய்நிகராக்கம்

இப்போது, மெய்நிகர் கணினி கண்காணிப்புக் கருவி (VMM) குறுக்கீடு கையாளுகை அம்சத்தை மேம்படுத்துவதற்காக, புதிய செயலிகளின் வன்பொருள் திறப்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், மேம்பட்ட நிரலாக்கக்கூடிய குறுக்கீடு கன்ட்ரோலர் (APIC) பதிவகங்களின் மெய்நிகராக்கம் ஆதரிக்கப்படுகிறது.

கெர்னலில் vmcp பில்ட்

Red Hat Enterprise Linux 7.0 இல், vmcp கெர்னல் தொகுதிக்கூறானது கெர்னலிலேயே உள்ளமைந்துள்ளது. இதனால் vmcp சாதன கனு எப்போதுமே இருக்க முடிகிறது, அத்துடன் இதன் மூலம் பயனர்கள் முதலில் vmcp கெர்னல் தொகுதிக்கூறை ஏற்றாமலே, IBM z/VM ஹைப்பர்வைசர் கட்டுப்பாட்டு நிரல் கட்டளைகளை அனுப்ப முடிகிறது.

வன்பொருள் பிழை அறிக்கையிடல் இயங்கம்சம்

தற்போது, Linux இல் உள்ள வன்பொருள் பிழை அறிக்கையிடல் இயங்கம்சமானது சிக்கலானதாக இருக்கலாம், இதற்கு அநேகமாக வெவ்வேறு மூலங்களிலிருந்து வெவ்வேறு முறைகளில் பிழைகளைச் சேகரிப்பதற்கு பயன்படும் பல்வேறு கருவிகள் (mcelog மற்றும் EDAC) மற்றும் பிழை நிகழ்வுகளை அறிக்கையிடுவதற்கு பயன்படும் பல்வேறு கருவிகள் (mcelog, edac-utils மற்றும் syslog போன்றவை) காரணமாக இருக்கலாம்.
வன்பொருள் பிழை அறிக்கையிடலில் உள்ள சிக்கல்களை பின்வரும் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்:
  • பல்வேறு தரவை சேகரிக்கின்ற சில சமயம் நகல் தரவை சேகரிக்கின்ற பல்வேறு பிழை தரவு சேகரிப்பு இயங்கம்சங்கள்,
  • மற்றும் இந்த தரவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர முத்திரைகளுடன் அறிக்கையிடும் வெவ்வேறு கருவிகள், இச்செயலால் நிகழ்வுகளை உடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது கடினமாகிறது.
Red Hat Enterprise Linux 7.0 இல் உள்ள புதிய வன்பொருள் நிகழ்வு அறிக்கையிடல் இயங்கம்சம் அல்லது HERM இன் குறிக்கோள், பல்வேறு மூலங்களில் இருந்து பிழை தரவை சேகரித்து, பயனர் வெளியில் தொடர்வரிசையான நேரநிரலில் ஒரே இடத்தில் பிழை நிகழ்வுகளை அறிக்கையிடும் செயலை ஒருங்கிணைப்பதே ஆகும். Red Hat Enterprise Linux 7.0 இல் உள்ள HERM ஆனது rasdaemon எனும் ஒரு புதிய பயனர் வெளி டீமானை அறிமுகப்படுத்துகிறது, இது கெர்னல் தடமறியும் அகக்கட்டமைப்பிலிருந்து வரும் அனைத்து நம்பகத்தன்மை, கிடைக்கும் தன்மை மற்றும் சேவைபுரியக்கூடிய தன்மை (RAS) பிழை நிகழ்வுகளையும் கைப்பற்றி கையாண்டு அவற்றைப் பதிவிடுகிறது. Red Hat Enterprise Linux 7.0 இல் உள்ள HERM ஆனது பிழைகளை அறிக்கையிடுவதற்கான கருவியையும் வழங்குகிறது, அத்துடன் பர்ஸ்ட் பிழைகள் மற்றும் ஸ்பார்ஸ் பிழைகள் போன்ற பிழை வகைகளையும் கண்டறியும் திறன் கொண்டது.

முழு DynTick ஆதரவு

nohz_full பூட் அளவுருவானது, டிக்கற்ற கெர்னல் அம்சத்தை, cpu ஒன்றுக்கான nr_running=1 அமைவு பயன்படுத்தப்படும் போது, டிக் எப்போது நிறுத்தப்படலாம் என்ற ஒரு புதிய நேர்வுக்கு நீட்டிக்கிறது. அதாவது CPU வின் இயக்க வரிசையில் இயக்கத்தக்க ஒரு பணியே இருக்கும்.

கெர்னல் தொகுதிக்கூறுகளை தடைப்பட்டியலில் சேர்த்தல்

Red Hat Enterprise Linux 7.0 இல் சேர்க்கப்பட்டுள்ள modprobe கருவியின் மூலம் பயனர்கள் நிறுவல் நேரத்தில் கெர்னல் தொகுதிக்கூறுகளை தடைப்பட்டியலில் சேர்க்க முடியும். ஒரு தொகுதிக்கூறு தானாக ஏற்றப்படுவதை ஒட்டுமொத்தமாக முடக்க, இந்தக் கட்டளையை இயக்கவும்:
modprobe.blacklist=module

செயல்நிலை கெர்னல் பேட்ச்சிங்

Red Hat Enterprise Linux 7.0 இல் தொழில்நுட்ப முன்னோட்டமாக kpatch எனும் செயல்மிகு கெர்னல் பேட்ச் நிர்வாகி அறிமுகப்படுத்தப்படுகிறது. kpatch மூலம் பயனர்கள் கெர்னலை ரீபூட் செய்யாமலே கெர்னலை செயல்மிகு முறையில் பயன்படுத்தக்கூடிய பைனரி கெர்னல் பேட்ச்களை நிர்வகிக்க முடியும்.

Emulex ocrdma இயக்கி

Red Hat Enterprise Linux 7.0 இல் Emulex ocrdma இயக்கி தொழில்நுட்ப முன்னோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இயக்கியானது குறிப்பிட்ட Emulex அடாப்ட்டர்களில் தொலைநிலை நேரடி நினைவக அணுகலை (RDMA) வழங்குகிறது.

dm-era இலக்கு

Red Hat Enterprise Linux 7.0 இல் dm-era சாதன-மேப்பர் இலக்கு ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. dm-era ஆனது "எரா" எனப்படும் பயனர் வரையறுக்கும் ஒரு கால அளவில் எந்தெந்த பிளாக்குகள் எழுதப்பட்டன என்பதைக் கண்காணித்து வைக்கிறது. ஒவ்வொரு எரா இலக்கு நேர்வும், தற்போதைய எராவை ஒரேவிதமாக அதிகரிக்கும் 32-பிட் கவுன்ட்டராக பராமரிக்கிறது. இந்த இலக்கானது, கடைசி மறுபிரதி நேரத்திலிருந்து எந்தெந்த பிளாக்குகள் மாற்றப்பட்டன என்பதைக் கண்காணித்துக்கொள்ள மறுபிரதி மென்பொருளை அனுமதிக்கிறது. வென்டார் ஸ்னேப்ஷாட்டுக்கு மீட்டமைஅத்த பிறகு, தேக்கக ஓரியல்புத்தன்மையை மீட்டமைப்பதற்கு, தேக்ககத்தின் உள்ளடக்கத்தின் பகுதியளவு செல்லுபடிநீக்கச் செயலையும் அனுமதிக்கிறது. dm-era இலக்கானது dm-cache இலக்குடன் பிணைக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடம் 9. மெய்நிகராக்கம்

9.1. கெர்னல்-அடிப்படையிலான மெய்நிகராக்கம்

virtio-blk-data-plane ஐப் பயன்படுத்தி ப்ளாக் I/O செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது

Red Hat Enterprise Linux 7.0 இல், virtio-blk-data-plane I/O மெய்நிகராக்க செயலம்சமானது தொழில்நுட்ப முன்னோட்டமாகக் கிடைக்கிறது. இந்த செயலம்சமானது QEMU ஐ, I/O செயல்திறனுக்காக உவப்பாக்கப்பட்ட ஒரு பிரத்யேகமான தொடரிழையில் வட்டு I/O ஐ செயல்படுத்தும்படி அமைக்கிறது.

PCI பிரிட்ஜ்

முன்னர் QEMU ஆனது 32 PCI துளைகள் வரை மட்டுமே ஆதரிக்கப்பட்டது. Red Hat Enterprise Linux 7.0 இல் PCI பிடிட்ஜ் இடம்பெற்றுள்ளது, இது பயனர்கள் 32 PCI சாதனங்களுக்கும் அதிகமானவற்றை அமைவாக்கம் செய்ய அனுமதிக்கிறது. பிரிட்ஜுக்குப் பின்னால் ஹாட் பிளக்கிங் செய்யும் வசதிக்கு ஆதரவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

QEMU சேன்ட்பாக்ஸிங்

Red Hat Enterprise Linux 7.0 இல் கெர்னல் சிஸ்டம் அழைப்பு வடிகட்டலைப் பயன்படுத்தும் மேம்படுத்தப்பட்ட KVM மெய்நிகராக்கப் பாதுகாப்பு இடம்பெற்றுள்ளது, அது வழங்கி கணினி மற்றும் விருந்தினருக்கு இடையில் தனிமைப்படுத்துதல் செயலை மேம்படுத்துகிறது.

QEMU மெய்நிகர் CPU ஹாட் சேர்த்தல் ஆதரவு

Red Hat Enterprise Linux 7.0 இல் உள்ள QEMU இல் மெய்நிகர் CPU (vCPU) ஹாட் சேர்த்தல் ஆதரவு உள்ளது. பணிச்சுமையின் தேவைகளை பூர்த்தி செய்ய அல்லது பணிச்சுமை தொடர்பான சேவை நிலை ஒப்பந்தத்தைப் (SLA) பராமரிக்க, இயங்கும் ஒரு மெய்நிகர் கணினிக்கு மெய்நிகர் CPUகளைச் (vCPUS) சேர்க்க முடியும். vCPU ஹாட் பிளக் செயலானது Red Hat Enterprise Linux 7.0 இலான முன்னிருப்பு கணினி வகையான pc-i440fx-rhel7.0.0 கணினி வகையைப் பயன்படுத்தும் மெய்நிகர் கணினிகளில் மட்டுமே ஆதரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பல வரிசை NICகள்

பல வரிசை virtio_net சிறப்பான அளவுமாற்றத்தன்மையை வழங்குகிறது; மெய்நிகர் CPU ஒவ்வொன்றும் தனித்தனியான பரப்பல் அல்லது பெறுகை வரிசையைக் கொண்டிருக்க முடியும், மற்ற மெய்நிகர் CPUகளைப் பாதிக்காத வகையில் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய தனித்தனி குறுக்கீடுகளைக் கொண்டிருக்கலாம்.

பல வரிசை virtio_scsi

பல வரிசை virtio_scsi சிறப்பான அளவுமாற்றத்தன்மையை வழங்குகிறது; மெய்நிகர் CPU ஒவ்வொன்றும் தனித்தனியான வரிசையையும் மற்ற மெய்நிகர் CPUகளைப் பாதிக்காத வகையில் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய தனித்தனி குறுக்கீடுகளையும் கொண்டிருக்க முடியும்.

நேரடி இடப்பெயர்ப்புக்கான பேஜ் டெல்ட்டா அமுக்கம்

KVM நேரடி இடப்பெயர்ப்பு அம்சம் விருந்தினர் நினைவகப் பக்கங்களை அமுக்கி பரிமாற்றம் செய்யப்படும் இடப்பெயர்ப்பு தரவின் அளவைக் குறைப்பதன் மூலம் மேம்பட்டதாக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தினால் இடப்பெயர்ப்பு வேகமாக நடைபெறுகிறது.

KVM இல் HyperV என்லைட்மென்ட்

KVM ஆனது பல Microsoft Hyper-V சார்புகள் கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது; எடுத்துக்காட்டாக, நினைவக நிர்வாக அலகு (MMU) மற்றும் மெய்நிகர் குறுக்கீட்டுக் கன்ட்ரோலர் ஆகியவற்றுக்கான ஆதரவைக் குறிப்பிடலாம். விருந்தினர் மற்றும் வழங்கிக்கு இடையே இணை-மெய்நிகராக்கப்பட்ட API ஐ Microsoft வழங்குகிறது, Microsoft இன் விவரக்குறிப்புகளின் படி, வழங்கியில் இந்த செயலம்சத்தின் பகுதிகளைச் செயல்படுத்தி உட்படுத்துவதன் மூலம் Microsoft Windows விருந்தினர்கள் தமது செயல்திறனை மேம்படுத்த முடியும்.

அதிக கற்றையகல I/O க்கான EOI முடுக்கம்

Red Hat Enterprise Linux 7.0 ஆனது குறுக்கீட்டு முடிவு (EOI) செயலாக்கத்தினை முடுக்குவதற்குள்ள மேம்பட்ட நிரலாக்கக்கூடிய குறுக்கீட்டு கன்ட்ரோலருக்கு (APIC) Intel மற்றும் AMD மேம்படுத்தல்களைப் பயன்படுத்துகின்றது. பழைய சிப்செட்களுக்கு, Red Hat Enterprise Linux 7.0 ஆனது EOI முடுக்கத்திற்கு இணை மெய்நிகராக்க விருப்பங்களை வழங்குகிறது.

KVM விருந்தினர்களுக்கு USB 3.0 ஆதரவு

Red Hat Enterprise Linux 7.0 இல் USB 3.0 ஹோஸ்ட் அடாப்ட்டர் (xHCI) எமுலேஷனை தொழில்நுட்ப முன்னோட்டமாக சேர்த்திருப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட USB ஆதரவு இடம்பெற்றுள்ளது.

Windows 8 மற்றும் Windows Server 2012 விருந்தினர் ஆதரவு

Red Hat Enterprise Linux 7.0 ஆனது KVM மெய்நிகர் கணினிகளுக்குள் இயங்கும் Microsoft Windows 8 மற்றும் Windows Server 2012 விருந்தினர்களை ஆதரிக்கிறது.

QEMU விருந்தினர்களுக்கான I/O திராட்லிங்

இந்த அம்சமானது QEMU விருந்தினர்கள் தொகுப்பு சாதனங்களுக்கு I/O திராட்லிங் அல்லது வரம்புகளை வழங்குகிறது. I/O திராட்லிங்கானது I/O நினைவகக் கோரிக்கைகளின் செயலாக்கத்தினை வேகம் குறைக்கிறது. இது கணினியை வேகம் குறைக்கிறது, ஆனால் செயலிழப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. தரவுத் தளங்களை திராட்டில் செய்வது சாத்தியமல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

பலூனிங் மற்றும் வெளிப்படையான பெரிய பக்கங்களின் ஒருங்கிணைப்பு

பலூனிங்கும் வெளிப்படையான பெரிய பக்கங்களும் Red Hat Enterprise Linux 7.0 இல் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பலூன் பக்கங்களை நகர்த்தி சிறிதாக்குவதன் மூலம் அவற்றை பெரிய பக்கங்களாக்க முடியும்.

வழங்கியில் இருந்து கணினி என்ட்ரோபியை இழுத்தல்

விருந்தினர்களுக்கு virtio-rng எனும் ஒரு புதிய சாதனத்தை அமைவாக்கம் செய்ய முடியும், இது வழங்கியிலிருந்து என்ட்ராபியை விருந்தினர்களுக்குப் பெற்றுத் தரும். முன்னிருப்பாக இத்தகவல் /dev/random கோப்பிலிருந்து பெறப்படுகிறது, ஆனால் வழங்கிகளில் இருக்கும் வன்பொருள் எழுந்தமான எண் உருவாக்கிகளையும் (RNGs) மூலமாகப் பயன்படுத்த முடியும்.

பிரிட்ஜ் ஜீரோ காபி டிரான்ஸ்மிட்

பிரிட்ஜ் ஜீரோ காபி டிரான்ஸ்மிட் என்பது பெரிய செய்திகளின் CPU செயலாக்கத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு அம்சமாகும். பிரிட்ஜ் ஜீரோ காபி டிரான்ஸ்மிட் அம்சமானது பிரிட்ஜைப் பயன்படுத்தும் போது விருந்தினரிலிருந்து வெளிப்போக்கான போக்குவரத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

நேரடி இடப்பெயர்ப்பு ஆதரவு

Red Hat Enterprise Linux 6.5 வழங்கி ஒன்றிலிருந்து Red Hat Enterprise Linux 7.0 வழங்கிக்கு ஒரு விருந்தினரை நேரடியாக இடப்பெயர்ப்பு செய்ய ஆதரவளிக்கப்படுகிறது.

qemu-kvm இல் அப்புறப்படுத்தல் ஆதரவு

டொமைனின் XML வரையறையில் <driver> கூறுக்கு அடுத்து discard='unmap' ஐச் சேர்த்த பிறகு, fstrim அல்லது mount -o discard கட்டளையைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தலுக்கு ஆதரவளிக்கப்படும். எடுத்துக்காட்டுக்கு:
<disk type='file' device='disk'>
	<driver name='qemu' type='raw' discard='unmap'/>
  <source file='/var/lib/libvirt/images/vm1.img'>
  ...
</disk>

NVIDIA GPU சாதன ஒதுக்கீடு

Red Hat Enterprise Linux 7.0 ஆனது எமுலேஷன் செய்யப்பட்ட VGA க்கு இரண்டாம் நிலை கிராஃபிக் சாதனமாக NVIDIA புரொஃபஷனல் வரிசை கிராஃபிக் சாதனங்களின் (GRID மற்றும் Quadro) சாதன ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது.

பாரா விர்ச்சுவலைஸ்டு டிக்கட்லாக்ஸ்

Red Hat Enterprise Linux 7.0 ஆனது, மேல் சந்தாபெற்ற CPUகளைக் கொண்ட Red Hat Enterprise Linux 7.0 வழங்கிகளில் இயங்கும் Red Hat Enterprise Linux 7.0 விருந்தினர் மெய்நிகர் கணினிகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பாரா விர்ச்சுவலைஸ்டு டிக்கட்லாக்ஸை (pvticketlocks) ஆதரிக்கிறது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட PCIe சாதனங்களில் பிழை கையாளுதல்

மேம்பட்ட பிழை அறிக்கையிடல் (AER) அம்சம் கொண்ட ஒரு PCIe சாதனம் விருந்தினர் ஒன்றுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் போது, அது பிழையை எதிர்கொண்டால், வழங்கியில் இயங்கும் மற்ற விருந்தினர்கள் எதையும் பாதிக்காத வகையில் பாதிக்கப்பட்ட விருந்தினரை மட்டும் செயலிழக்கவைக்கப்படுகிறது. சாதனத்திற்கான வழங்கி இயக்கி பிழையிலிருந்து மீண்ட பிறகு விருந்தினர்கள் செயல்நிலைக்கு கொண்டு வரப்பட முடியும்.

Q35 சிப்செட், PCI எக்ஸ்பிரஸ் பஸ் மற்றும் AHCI பஸ் எமுலேஷன்

Red Hat Enterprise Linux 7.0 இல், KVM விருந்தினர் மெய்நிகர் கணினிகளில் PCI எக்ஸ்பிரஸ் பஸ் ஆதரவுக்குத் தேவையான Q35 கணினி வகை தொழில்நுட்ப முன்னோட்டமாகக் கிடைக்கிறது. AHCI பஸ் Q35 கணினி வகையில் சேர்ப்பதற்கு மட்டுமே ஆதரிக்கப்படுகிறது, மேலும் Red Hat Enterprise Linux 7.0 இல் அது தொழில்நுட்ப முன்னோட்டமாகவும் கிடைக்கிறது.

VFIO-அடிப்படையிலான PCI சாதன ஒதுக்கீடு

மெய்நிகர் செயலம்சம் I/O (VFIO) பயனர்-வெளி இயிஅக்கி இடைமுகமானது KVM விருந்தினர் மெய்நிகர் கணினிகளுக்கு மேம்பட்ட PCI சாதன ஒதுக்கீட்டுத் தீர்வை வழங்குகிறது. VFIO ஆனது கெர்னல் நிலையிலான சாதன தனிப்படுத்துதல் செயல்படுத்தலை வழங்கி, சாதன அணுகலின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது, மேலும் இது பாதுகாப்பான பூட் போன்ற அம்சங்களுடன் இணக்கமானதுமாகும். VFIO ஆனது Red Hat Enterprise Linux 6 இல் பயன்படுத்தப்பட்ட KVM சாதன ஒதுக்கீட்டு இயங்கம்சத்திற்கு பதிலாக இடம்பெற்றுள்ளது.

Intel VT-d பெரிய பக்கங்கள்

Red Hat Enterprise Linux 7.0 இல் ஒரு KVM விருந்தினர் மெய்நிகர் கணினியில் மெய்நிகர் செயலம்சம் I/O (VFIO) சாதன ஒதுக்கீட்டைப் பயன்படுத்தும் போது, உள்ளீடு/வெளியீடு நினைவக நிர்வாக அலகு (IOMMU) 2MB பக்கங்களைப் பயன்படுத்துகிறது, இதனால் I/O செயல்பாடுகளுக்கான மொழிபெயர்ப்பு கவனிப்பு இடையக (TLB) பராமரிப்பு நேரம் குறைகிறது. Red Hat Enterprise Linux 7.0 க்கு 1GB பக்கத்திற்கான ஆதரவு சேர்க்கும் திட்டமுள்ளது.VT-d பெரிய பக்கங்கள் அம்சமானது சில குறிப்பிட்ட மிக சமீபத்தியIntel-அடிப்படையிலான இயங்குதளங்களுக்கு மட்டுமே ஆதரிக்கப்படும்.

KVM க்ளாக் கெட் டைம் செயல்திறன்

Red Hat Enterprise Linux 7.0 இல் KVM விருந்தினர்களுக்கான பயனர் வெளியிலிருந்து கடிகாரத்தினை வேகமாக வாசிப்பதை ஆதரிப்பதற்காக, vsyscall இயங்கம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு Red Hat Enterprise Linux 7.0 வழங்கியில் Red Hat Enterprise Linux 7.0 ஐ இயக்கும் ஒரு விருந்தினர் மெய்நிகர் கணினியில், அடிக்கடி நாளின் நேரத்தை வாசிக்கும் பயன்பாடுகளின் செயல்திறன் மேம்பட்டிருப்பது நன்கு புலப்படும்.

QCOW2 பதிப்பு 3 பட வடிவமைப்பு

Red Hat Enterprise Linux 7.0 இல் QCOW2 பதிப்பு 3 பட வடிவமைப்புக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட நேரடி இடப்பெயர்ப்பு புள்ளிவிவரங்கள்

இப்போது பகுப்பாய்வு செய்யவும் செயல்திறனை சரிசெய்யவும், நேரடி இடப்பெயர்ப்பு பற்றிய தகவல் கிடைக்கிறது. எதிர்பார்க்கப்படும் செயலிழப்பு நேரம், செயலிழப்பு நேரம் அல்லது மோசமான பக்கங்கள் வேகம் போன்றவை பற்றிய தகவல்கள் இந்த மேம்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களில் அடங்கும்.

நேரடி இடப்பெயர்ப்பு தொடரிழைகள்

KVM நேரடி இடப்பெயர்ப்பு அம்சமானது தொடரிழையமைத்தலை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்து சாதனங்கள் மற்றும் சீரியல் துறைகளின் ஹாட் பிளக்கிங்

இப்போது Red Hat Enterprise Linux 7.0 இல் எழுத்து சாதனங்கள் மற்றும் சீரியல் துறைகளின் ஹாட் பிளக்கிங் ஆதரிக்கப்படுகிறது.

AMD Opteron G5 இன் எமுலேஷன்

இப்போது AMD Opteron G5 செயலிகளை எமுலேட் செய்ய KVM கிடைக்கிறது.

KVM விருந்தினர்களில் புதிய Intel வழிமுறைகளுக்கான ஆதரவு

KVM விருந்தினர்கள் Intel 22nm செயலிகள் ஆதரிக்கும் புதிய வழிமுறைகளை பயன்படுத்த முடியும். அவை:
  • ஃப்ளோட்டிங்-பாயின்ட் இணைக்கப்பட்ட பெருக்கல்-கூட்டல்,
  • 256-பிட் முழு எண் வெக்டார்கள்,
  • பிக்-என்டியன் நகர்வு வழிமுறை (MOVBE) ஆதரவு,
  • அல்லது HLE/HLE+.

VPC மற்றும் VHDX கோப்பு வடிவங்கள்

Red Hat Enterprise Linux 7.0 இல் உள்ள KVM இல் Microsoft Virtual PC (VPC) மற்றும்Microsoft Hyper-V virtual hard disk (VHDX) கோப்பு வடிவங்களுக்கான ஆதரவு உள்ளது.

libguestfs இல் புதிய அம்சங்கள்

libguestfs என்பது மெய்நிகர் கணினி வட்டு பிம்பங்களை அணுகுவதற்கும் மாற்றியமைப்பதற்குமான கருவிகளின் தொகுப்பாகும். Red Hat Enterprise Linux 7.0 இல் சேர்க்கப்பட்டுள்ள libguestfs இல் பல மேம்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை:
  • SELinux ஐப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் பாதுகாப்பான மெய்நிகராக்கம் அல்லது sVirt பாதுகாப்பானது தீங்கிழைக்கின்ற மற்றும் தவறாக வடிவமைக்கப்பட்ட வட்டு பிம்பங்களுக்கு எதிரான மேம்பட்ட பாதுகாப்பை அளிக்கிறது.
  • தொடக்கத்தில் பிணைய தொகுப்பு சாதனத்தின் மூலம் (NBD) தொலைநிலை வட்டுக்களை ஆய்வு செய்யவும் மாற்றியமைக்கவும் முடியும்.
  • சில குறிப்பிட்ட பயன்பாடுகளில் சிறப்பான செயல்திறனுக்காக வட்டுகளை ஹாட் பிளக்கிங் செய்ய முடியும்.

WHQL-சான்றளிக்கப்பட்ட விர்ச்சியோ-வின் சாதனங்கள்

Red Hat Enterprise Linux 7.0 இல் சமீபத்திய Microsoft Windows விருந்தினர்களுக்காக, Microsoft Window 8, 8.1, 2012 மற்றும் 2012 R2 ஆகிய Windows ஹார்ட்வேர் க்வாலிட்டி லேப்ஸ் (WHQL) சான்றளிக்கப்பட்டvirtio-win இயக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

9.2. Xen

Red Hat Enterprise Linux 7.0 Xen HVM விருந்தினர்

இப்போது பயனர்கள் பிரபலமான Xen சூழலில் Red Hat Enterprise Linux 7.0 ஐ ஒரு விருந்தினராகப் பயன்படுத்த முடியும்.

9.3. ஹைப்பர்-V

Red Hat Enterprise Linux 7.0 ஜெனரேஷன் 2 மெய்நிகர் கணினியாக ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது

Microsoft Hyper-V Server 2012 R2 வழங்கியில் Red Hat Enterprise Linux 7.0 ஐ ஜெனரேஷன் 2 மெய்நிகர் கணினியாக பயன்படுத்த முடியும். முந்தைய ஜெனரேஷனில் ஆதரிக்கப்பட்ட செயலம்சங்களுடன் கூடுதலாக, ஜெனரேஷன் 2 மெய்நிகர் கணினியில் புதிய செயலம்சங்களை வழங்குகிறது; எடுத்துக்காட்டாக, பாதுகாப்பான பூட், SCSI மெய்நிகர் வன்வட்டிலிருந்து பூட் செய்தல் அல்லது UEFI சாதன நிரல் ஆதரவு.

பாடம் 10. கணினி மற்றும் சேவைகள்

systemd

systemd என்பது Linux க்கான கணினி மற்றும் சேவை நிர்வாகியாகும், இது Red Hat Enterprise Linux இன் முந்தைய பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வந்த SysV க்கு பதிலாக இடம்பெற்றுள்ளது. systemd ஆனது SysV மற்றும் Linux Standard Base init ஸ்கிரிப்ட்டுகளுடன் இணக்கமானது.
systemd பல அம்சங்களை வழங்குகிறது, அவற்றுள் சில:
  • வலிமையான இணையாக்க அம்சங்கள்.
  • சாக்கெட் பயன்பாடு மற்றும் சேவைகளைத் தொடங்குவதற்கு D-Bus செயல்படுத்தல்.
  • தேவைப்படும் போது டீமான்களைத் தொடங்குதல்.
  • கட்டுப்பாட்டுக் குழுக்களை நிர்வகித்தல்.
  • கணினி நிலை ஸ்னாப்ஷாட்டுகளை உருவாக்குதல் மற்றும் கணினி நிலையை மீட்டமைத்தல்.
systemd மற்றும் அமைவாக்கம் மற்றிய விரிவான தகவலுக்கு கணினி நிர்வாகி வழிகாட்டியைப் பார்க்கவும்.

பாடம் 11. க்ளஸ்டரிங்

மிக முக்கியமான உற்பத்தி சேவைகளுக்கு நம்பகத்தன்மை, அளவுமாற்றும் தன்மை மற்றும் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதற்காக, கூட்டாக பணி புரியும் பல கணினிகளின் (கனுக்கள்) க்ளஸ்ட்டர் எனப்படுகிறது. Red Hat Enterprise Linux 7.0 ஐப் பயன்படுத்தி, செயல்திறன், அதிகம் கிடைக்கும் தன்மை, பணிச்சுமை சமநிலைப்படுத்தல் மற்றும் கோப்புப் பகிர்தலம்சம் ஆகியவற்றின் மாறுபடும் தேவைகளுக்குப் பொருந்தும் வகையிலான பல்வேறு அமைவாக்கங்களில் High Availability ஐ தயாரமைப்பு செய்ய முடியும்.
இப்போது Red Hat Enterprise Linux 7.0 Load Balancer அடிப்படை Red Hat Enterprise Linux இன் பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Red Hat High Availability துணை நிரலின் அமைவாக்கம் மற்றும் நிர்வாகம் பற்றிய தகவலை வழங்கும் Red Hat Enterprise Linux 7.0 க்குக் கிடைக்கும் ஆவணங்களின் பட்டியலுக்கு பிரிவு 20.5, “க்ளஸ்டரிங் மற்றும் கூடுதல் கிடைத்தல்” ஐப் பார்க்கவும்.

11.1. Pacemaker க்ளஸ்ட்டர் நிர்வாகி

Red Hat Enterprise Linux 7.0 இல் க்ளஸ்ட்டர் வளங்களை நிர்வகிக்கவும் கனு தோல்விகளிலிருந்து மீட்கவும் rgmanager க்கு பதிலாகPacemaker இடம்பெறுகிறது.
Pacemaker இன் நன்மைகளில் சில:
  • வள அமைவாக்கத்தின் தானியக்க ஒத்திசைவு மற்றும் பதிப்பிடல்.
  • பயனரின் சூழலுக்கு நெருக்கமாக பொருந்துகின்ற ஒரு நெகிழ்தன்மை கொண்ட வளம் மற்றும் ஃபென்சிங் மாதிரியம்.
  • வள அளவிலான தோல்விகளில் இருந்து மீட்க ஃபென்சிங்கைப் பயன்படுத்தலாம்.
  • நேர-அடிப்படையிலான அமைவாக்க விருப்பங்கள்.
  • ஒரே வளத்தை பல கனுக்களில் இயக்கும் வசதி. உதாரணமாக ஒரு வலை சேவையகம் அல்லது க்ளஸ்ட்டர் கோப்பு முறைமையைக் குறிப்பிடலாம்.
  • இரண்டு வெவ்வேறு பயன்முறைகளில் ஒன்றில், ஒரே வளத்தை பல கனுக்களில் இயக்கும் வசதி, உதாரணமாக ஒரு ஒத்திசைவு மூலம் மற்றும் இலக்கு.
  • Pacemaker க்கு ஒரு விரவியமைக்கப்பட்ட பூட்டு நிர்வாகி தேவையில்லை.
  • க்வோரம்கள் இழக்கப்படும் போது அல்லது பல பிரிவாக்கங்கள் உருவாக்கப்படும் போது, அமைவாக்கம் செய்யத்தக்க குணாம்சம்.

11.2. Piranha க்கு பதிலாக keepalived மற்றும் HAProxy இடம்பெற்றுள்ளது

Red Hat Enterprise Linux 7.0 இல் Piranha Load Balancer க்கு பதிலாக keepalived மற்றும் HAProxy ஆகியவை இடம்பெற்றுள்ளன.
keepalived தொகுப்பானது சுமை சமநிலைப்படுத்தல் மற்றும் அதிக கிடைக்கும் தன்மை ஆகியவற்றுக்கு எளிய மற்றும் வலிமையான அம்சங்களை வழங்குகிறது. சுமை சமநிலைப்படுத்தல் பணிச்சட்டமானது பிரபலமான மற்றும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற, Layer4 பிணைய சுமை சமநிலைப்படுத்தலம்சத்தை வழங்குகின்ற Linux விர்ச்சுவல் சர்வர் கெர்னல் தொகுதிக்கூறைச் சார்ந்து செயல்படுகிறது. keepalived டீமான் சுமை சமநிலைப்படுத்தப்பட்ட சேவையக தொகுப்பகங்களின் நிலைகளுக்கு ஏற்ப அவற்றில் சில நல சோதனை அம்சங்களை செயல்படுத்துகிறது. keepalived டீமன் ரூட்டர் அல்லது டைரக்ட்டர் ஃபெயிலோவர் அதிக கிடைக்கும் தன்மையைப் பெற உதவுகின்ற விர்ச்சுவல் ரௌட்டர் ரிடன்டன்சி நெறிமுறையையும் (VRRP) செயல்படுத்துகிறது.
HAProxy, TCP மற்றும் HTTP-அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு ஒரு நம்பகமான, உயர் செயல்திறன் கொண்ட பிணைய சுமை சமநிலைப்படுத்தியை வழங்குகிறது. குறிப்பாக நிரந்தரத்தன்மை அலது Layer7 செயலாக்கம் தேவைப்படும் நிலையில், அதிக சுமையுடன் கிராவ்லிங் செய்யும் வலைத்தளங்களுக்கு இது மிகவும் ஏற்றது.

11.3. High Availability நிர்வாகம்

Pacemaker Configuration System அல்லது pcs, ccs, ricci மற்றும் luci க்கு பதிலாக ஒருமயமாக்கப்பட்ட கிளஸ்ட்டர் அமைவாக்கம் மற்றும் நிர்வாகக் கருவியாக இடம்பெற்றுள்ளது. pcs இன் சில நன்மைகள்:
  • கட்டளைமுறைக் கருவி.
  • ஒரு கிளஸ்ட்டருடன் எளிதாக பூட்ஸ்ட்ராப் ஆகும் திறன், அதாவது தொடக்க கிளஸ்ட்டரை தொடங்கி இயக்கச் செய்தல்.
  • கிளஸ்ட்டர் விருப்பங்களை அமைவாக்கம் செய்யும் வசதி.
  • வளங்களையும் அவற்றின் உறவுகளையும் ஒன்றுக்கொன்று சேர்க்க, நீக்க அல்லது மாற்றம் செய்ய முடியும் வசதி.

11.4. புதிய வள முகவர்கள்

Red Hat Enterprise Linux 7.0 இல் பல வள முகவர்கள் உள்ளன. வள முகவர் என்பது கிளஸ்ட்டர் வளம் ஒன்றுக்கான தரநிலையாக்கப்பட்ட இடைமுகமாகும். ஒரு வள முகவர், தரநிலையான செயல்பாடுகளின் ஒரு தொகுதியை மொழிபெயர்த்து, அவற்றை வளம் அல்லது பயன்பாட்டுக்கு உரிய படிகளாக மாற்றி, அவற்றின் முடிவுகளை வெற்றி அல்லது தோல்வி எனத் தெரியப்படுத்துகிறது.

பாடம் 12. கம்பைலர் மற்றும் கருவிகள்

12.1. GCC கருவித்தொடர்

Red Hat Enterprise Linux 7.0 இல் gcc கருவித்தொடரானது gcc-4.8.x வெளியீட்டு வரிசையின் அடிப்படையில் அமைந்துள்ளது, மேலும் அது Red Hat Enterprise Linux 6 சமப் பதிப்புகள் தொடர்பான பல மேம்பாடுகளையும் வழுநீக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது. அதே போல, Red Hat Enterprise Linux 7 இல் binutils-2.23.52.x சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிப்புகள் Red Hat Developer Toolset 2.0 இல் உள்ள சமப்பண்புள்ள கருவிகளுக்கு உரியவையாகும்; ஆகவே Red Hat Enterprise Linux 6 மற்றும் Red Hat Enterprise Linux 7 gcc மற்றும் binutils ஆகிய பதிப்புகளுக்கு இடையிலான விவரமான ஒப்பீட்டை இங்கு காணலாம்:
Red Hat Enterprise Linux 7.0 கருவித்தொடரின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
  • C++11 உடன் இணக்கமான பயன்பாடுகளை பில்ட் செய்வதற்கான பரிசோதனை நிலை ஆதரவு (முழு C++11 மொழி ஆதரவு உட்பட) மற்றும் C11 அம்சங்களுக்கான சில பரிசோதனை நிலை ஆதரவு.
  • OpenMP v3.1, C++11 வகைகள் மற்றும் தானியக்க நினைவக அணுகலுக்கான GCC Built-ins ஆகியவிஅ உள்ளிட்ட இணையான பயன்பாடுகளை நிரலாக்கம் செய்வதற்கான மேம்பட்ட ஆதரவு மற்றும் பரிவர்த்தனை நினைவகத்திற்கான பரிசோதனை நிலை ஆதரவு (Intel RTM/HLE இன்ட்ரின்ஸிக்ஸ், built-ins மற்றும் குறியீடு உருவாக்கம் ஆகியவை உட்பட)
  • குறியீட்டு செயல்திறனை மேம்படுத்துகின்ற ஒரு புதிய உள்ளமை பதிவக ஒதுக்கி (LRA).
  • இப்போது முன்னிருப்பு வழுநீக்க வடிவமைப்பாக DWARF4 பயன்படுத்தப்படுகிறது.
  • பல வகையான புதிய கட்டமைப்பு சார்ந்த விருப்பங்கள்.
  • AMD குடும்பம் 15h மற்றும் 16h செயலிகளுக்கான ஆதரவு.
  • லிங்க்-டைம் உவப்பாக்கல் ஆதரவு.
  • மேம்படுத்தப்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் கண்டறிதல்கள்.
  • பல வகையான புதிய Fortran அம்சங்கள்.

12.2. GLIBC

Red Hat Enterprise Linux 7.0 இல், glibc தரவகங்கள் (libc, libm, libpthread, NSS செருகுநிரல்கள் மற்றும் பிற) glibc 2.17 வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள, இதில் Red Hat Enterprise Linux 6 சமப் பதிப்பு தொடர்பான பல மேம்பாடுகளும் வழு நீக்கங்களும் உள்ளடங்கியுள்ளன.
Red Hat Enterprise Linux 7.0 glibc தரவகங்களின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
  • பரிசோதனை நிலை ISO C11 ஆதரவு.
  • புதிய Linux இடைமுகங்கள்: prlimit, prlimit64, fanotify_init, fanotify_mark, clock_adjtime, name_to_handle_at, open_by_handle_at, syncfs, setns, sendmmsg, process_vm_readv, process_vm_writev.
  • AMD64 மற்றும் Intel 64 கட்டமைப்புகளுக்கு, ஸ்ட்ரீமிங் SIMD எக்ஸ்டென்ஷன்ஸ் (SSE), சப்ளிமென்ட்டல் ஸ்ட்ரீமிங் SIMD எக்ஸ்டென்ஷன்ஸ் 3 (SSSE3), ஸ்ட்ரீமிங் SIMD எக்ஸ்டென்ஷன்ஸ் 4.2 (SSE4.2) மற்றும் அட்வான்ஸ்டு வெக்ட்டார் எக்ஸ்டென்ஷன்ஸ் (AVX) ஆகியவற்றைப் பயன்படுத்தி வழங்கப்பட்டுள்ள புதிய மேம்பட்ட சர சார்புகள்.
  • IBM PowerPC மற்றும் IBM POWER7 ஆகியவற்றுக்கு புதிய மேம்பட்ட சர சார்புகள்.
  • IBM S/390 மற்றும் IBM System z ஆகியவற்றுக்கு, குறிப்பாக IBM System z10 மற்றும் IBM zEnterprise 196 ஆகியவற்றுக்காக மேம்படுத்தப்பட்ட ரொட்டீன்களுடன் கூடிய புதிய மேம்பட்ட சர சார்புகள்.
  • புதிய மொழிகள்: os_RU, bem_ZA, en_ZA, ff_SN, sw_KE, sw_TZ, lb_LU, wae_CH, yue_HK, lij_IT, mhr_RU, bho_IN, unm_US, es_CU, ta_LK, ayc_PE, doi_IN, ia_FR, mni_IN, nhn_MX, niu_NU, niu_NZ, sat_IN, szl_PL, mag_IN.
  • புதிய குறியீடாக்கங்கள்: CP770, CP771, CP772, CP773, CP774.
  • புதிய இடைமுகங்கள்: scandirat, scandirat64.
  • FD_SET, FD_CLR, FD_ISSET, poll மற்றும் ppoll கோப்பு விவரிப்பான்களின் பதிப்புகளை சோதித்தரிவதற்கான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • nscd டிமானில் இப்போது netgroup தரவுத்தளத்தின் தேக்ககப்படுத்தலுக்கு ஆதரவுள்ளது.
  • புதிய சார்பான secure_getenv() சூழலுக்கான பாதுகாப்பான அணுகலை அனுமதிக்கிறது, அது SUID அல்லது SGID செயலாக்கத்தில் இயங்கினால் NULL ஐ வழங்கும். இந்த சார்பானது, அகவமை சார்பான __secure_getenv() க்கு பதிலாக இடம்பெற்றுள்ளது.
  • இப்போது, மதிப்புகளுக்கான விவரக்குறிப்பை மீறும் சால்ட் பைட்டுகளை வழங்கினால் crypt() சார்பானது தோல்வியடையும். Linux இல், FIPS பயன்முறை இயக்கப்பட்டுள்ளதா என தீர்மானிக்க crypt() சார்பானது /proc/sys/crypto/fips_enabled கோப்பை அணுகும், பயன்முறை இயக்கப்பட்டிருந்தால், மெசேஜ்-டைஜஸ்ட் படிமுறை 5 (MD5) அல்லதுதரவு மறைகுறியாக்கத் தரநிலை (DES) படிமுறையைப் பயன்படுத்திய மறைகுறியாக்கப்பட்ட சரங்களில் தோல்வியடையும்.
  • clock_* சார்புகளின் தொகுப்பானது (<time.h> இல் ஒப்பறிவிக்கப்பட்டவை) இப்போது பிரதான C தரவகத்தில் கிடைக்கும். முன்னர் இந்த சார்புகளைப் பயன்படுத்த -lrt உடன் இணைக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்த மாற்றத்தின் விளைவாக, clock_gettime() (மற்றும் -lrt உடன் இணைக்கப்படாத) போன்ற ஒரு சார்பைப் பயன்படுத்தும் ஒற்றை இழை நிரலானது இயக்க நேரத்தில் வெளிப்படையாக pthreads தரவகத்தை ஏற்றாது, ஆகவே மற்ற C++ இயக்கநேர தரவகம் போன்ற குறியீடுகளில் உள்ளதைப் போன்ற பல-தொடரிழை ஆதரவு தொடர்பான வேலைச் சுமைகளால் பாதிக்கப்படாது.
  • புதிய தலைப்பு <sys/auxv.h> மற்றும் சார்பு getauxval() ஆகியவை Linux கெர்னலில் இருந்து வழங்கப்படும் AT_* கீ-வேல்யூ சோடிகளுக்கான எளிய அணுகலை அனுமதிக்கின்றன. தலைப்பானது AT_HWCAP கீயுடன் தொடர்புடைய HWCAP_* பிட்களையும் வரையறுக்கிறது.
  • கீழ் நிலை இயங்குதளம் சார்ந்த செயலம்சத்திற்கு நிறுவப்பட்ட ஒரு புதிய வகை தலைப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. PowerPC ஆனது நேர அடிப்படையிலான பதிவக அணுகலை வழங்குவதற்கு ஒரு சார்புடனான முதல் நேர்வை சேர்த்துள்ளது.

12.3. GDB

Red Hat Enterprise Linux 7.0 இல் GDB வழுநீக்கியானது gdb-7.6.1 வெளியீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது, மேலும் அது Red Hat Enterprise Linux 6 சமப் பதிப்புகள் தொடர்பான பல மேம்பாடுகளையும் வழுநீக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பதிப்பு Red Hat Developer Toolset v2.0; இல் உள்ள GDB க்கு உரியது; Red Hat Enterprise Linux 6 மற்றும்Red Hat Enterprise Linux 7.0 GDB பதிப்புகளுக்கு இடையிலான விரிவான ஒப்பீட்டை இங்கு காணலாம்:
Red Hat Enterprise Linux 7.0 இல் சேர்க்கப்பட்டுள்ள GDB இன் புதிய குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
  • .gdb_index பிரிவு மற்றும் புதிய gdb-add-index ஷெல் கட்டளை ஆகியவையற்றைப் பயன்படுத்தி குறியீடுகளின் வேகமான ஏற்றம். Red Hat Enterprise Linux 6.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இந்த அம்சம் ஏற்கனவே இருந்தது என்பதை நினைவில் கொள்ளவும்.
  • இப்போது gdbserver தரநிலை உள்ளீடு/வெளியீடு (STDIO) இணைப்புகளை ஆதரிக்கிறது, எடுத்துக்காட்டாக: (gdb) target remote | ssh myhost gdbserver - hello
  • -location அளவுருவைப் பயன்படுத்தி watch இன் கூடுதல் எதிர்பார்க்கத்தக்க செயல்குணம்.
  • info vtbl எனும் புதிய கட்டளையைக் கொண்டு மெய்நிகர் முறை அட்டவணைகளைக் காண்பிக்கச் செய்யலாம்.
  • info auto-load, set auto-load மற்றும் show auto-load ஆகிய புதிய கட்டளைகளைப் பயன்படுத்தி கோப்புகளின் தானியக்க ஏற்றலின் மீதான கட்டுப்பாடு.
  • set filename-display absolute கட்டளையைப் பயன்படுத்தி மூலக் கோப்பு பெயர்களுக்கான துல்லியப் பாதையைக் காண்பிக்கச் செய்தல்.
  • record btrace எனும் புதிய கட்டளை மூலம், வன்பொருள் ஆதரவுடன் கட்டுப்பாட்டுப் பாய்வுப் பதிவு செய்தல்.
Red Hat Enterprise Linux 7.0 உடன் வழங்கப்படும் GDB இல் குறிப்பிடத்தக்க வழுநீக்கங்கள் பின்வருமாறு:
  • info proc கட்டளையானது கோர் கோப்புகளிலும் செயல்படக்கூடிய வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • இப்போது அனைத்து இன்ஃபீரியர்களிலும் பொருந்தக்கூடிய அனைத்து இடங்களிலும் ப்ரேக்பாயின்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இப்போது ப்ரேக்பாயின்ட் இடத்தின் கோப்புப் பெயர்ப் பகுதியானது ஒரு மூலக் கோப்புப் பெயரின் பிற்பகுதிக் கூறுக்குப் பொருந்தும்.
  • இப்போது இன்லைன் சார்புகளில் ப்ரேக்பாயின்ட்டுகளை இட முடியும்.
  • இப்போது மாதிரியுரு நேர்வாக்கம் செய்யப்படும் போது, மாதிரியுருக்களின் அளவுருக்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, Red Hat Enterprise Linux 7.0 gdb-doc எனும் ஒரு புதிய தொகுப்பை வழங்குகிறது, அதில் GDB உதவிக் கையேடு PDF, HTML மற்றும் info வடிவங்களில் உள்ளது. Red Hat Enterprise Linux இன் முந்தைய பதிப்புகளில் GDB உதவிக் கையேடானது பிரதான RPM தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்தது.

12.4. செயல்திறன் கருவிகள்

Red Hat Enterprise Linux 7.0 இல், oprofile, papi மற்றும் elfutils போன்ற பல செயல்திறன் கருவிகளின் மிக சமீபத்திய பதிப்புகளுக்கான புதுப்பிப்புகளால்,செயல்திறன், எளிதில் இடமாற்றுமம்சம் மற்றும் செயலம்சம் ஆகியவை மேம்பட்டுள்ளன.
மேலும் Red Hat Enterprise Linux 7.0 இன் அம்சங்கள்:
  • Performance Co-Pilot க்கான ஆதரவு.
  • முழுவதும் அனுமதியில்லாத பயனர் வெளியில் இயங்குகின்ற (DynInst-அடிப்படையிலான) கருவியாக்கத்திற்கான SystemTap ஆதரவு மற்றும் Java பயன்பாடுகளின் (Byteman-அடிப்படையிலான) செயல்திறன் மிக்க பின்பாயின்ட் புரோபிங்.
  • வன்பொருள் பரிவர்த்தனை நினைவகத்திற்கான Valgrind ஆதரவு மற்றும் வெக்ட்டர் வழிமுறைகளின் மாடலிங்கில் மேம்பாடுகள்.

12.4.1. Performance Co-Pilot

Red Hat Enterprise Linux 7.0 கருவிகள், சேவைகள், மற்றும் கணினியளவிலான செயல்திறன் அளவீடுகளை கையகப்படுத்தல், காப்பகப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான தரவகங்கள் ஆகியவற்றின் தொகுப்பான Performance Co-Pilot (PCP) க்கான ஆதரவை அறிமுகப்படுத்துகிறது. இதன் லேசான, பல கட்டமைப்புகளுக்குப் பொருந்தும் தன்மையால் இது சிக்கலான கணினிகளின் மையநிலைப் பகுப்பாய்வுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
Python, Perl, C++ மற்றும் C இடைமுகங்களைப் பயன்படுத்தி செயல்திறன் தரவுகளைச் சேர்க்க முடியும். பகுப்பாய்வுக் கருவிகள் நேரடியாக கிளையன் APIகளைப் (Python, C++, C) பயன்படுத்த முடியும், உயர் நிலை வலைப் பயன்பாடுகளால், JSON இடைமுகத்தைப் பயன்படுத்தி கிடைக்கக்கூடிய அனைத்து செயல்திறன் தரவையும் கண்டறிய முடியும்.
மேலும் தகவலுக்கு pcp மற்றும் pcp-libs-devel தொகுப்புகளில் உள்ள விரிவான உதவிப் பக்கத்தைப் பார்க்கவும். pcp-doc தொகுப்பில் அப்ஸ்ட்ரீம் திட்டப்பணியிலிருந்து இரண்டு கட்டற்ற மற்றும் திறநிலைப் புத்தகங்களும் உள்ளடங்கியுள்ளன:

12.4.2. SystemTap

Red Hat Enterprise Linux 7.0 இல் systemtap பதிப்பு 2.4 உள்ளடங்குகிறது, இது பல புதிய அம்சங்களை வழங்குகிறது. கட்டாயமற்ற முற்றிலும் பயனர் வெளி ஸ்கிரிப்ட் செயல்படுத்துதல், உயர்ந்த மற்றும் அதிக செயல்திறன் கொண்ட Java புரோபிங், மெய்நிகர் கணினி புரோபிங், மேம்பட்ட பிழைச் செய்திகள் மற்றும் பல வழுநீக்கங்கள் மற்றும் புதிய அம்சங்கள் ஆகியவை இதிலடங்கும். குறிப்பாக பின்வருபவற்றைக் கூறலாம்:
  • இப்போது SystemTap ஆனது dyninst பைனரி திருத்த தரவகத்தைப் பயன்படுத்தி சில ஸ்கிரிப்ட்டுகளை முற்றிலும் பயனர் வெளியிலேயே செயல்படுத்த முடியும்; அதற்கு கெர்னல் அல்லது ரூட் அனுமதிகள் பயன்படுத்தப்படுவதில்லை. stap --dyninst கட்டளையைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்படும் இந்த பயன்முறையானது பயனரின் செயலாக்கங்களை மட்டுமே பாதிக்கின்ற வகை புரோப் அல்லது செயல்பாடுகளை மட்டுமே செயல்படுத்தும். இந்த பயன்முறையானது C++ விலக்கங்களை வீசும் நிரல்களுடன் இணக்கமற்றது என்பதை நினைவில் கொள்ளவும்.
  • byteman கருவியுடன் இணைந்தவகையில், Java பயன்பாடுகளில் புரோப்களை செலுத்தும் ஒரு புதிய முறை ஆதரிக்கப்படுகிறது. புதிய SystemTap புரோப் வகைகளான java("com.app").class("class_name").method("name(signature)").*, கணினியளவிலான தடமறிதல் ஏதும் இன்றி தனித்தனியான முறை நுழைவு மற்றும் வெளியீடு நிகழ்வுகளின் புரோபிங்கை செயல்படுத்துகின்றன.
  • ஒரு சேவையகத்தில் இயங்குகின்ற libvirt-நிர்வகிக்கும் KVM நேர்வில் தொலைநிலை செயல்படுத்தலை இயக்க SystemTap இயக்கி கருவியமைப்பில் ஒரு புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அது கம்பைல் செய்யப்பட்ட SystemTap ஸ்கிரிப்ட்டை, ஒரு பிரத்யேகமான பாதுகாப்பான virtio-serial இணைப்பில் உள்ள மெய்நிகர் கணினி விருந்தினர் ஒன்றுக்கு, தானியக்கமான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை அளிக்கிறது. விருந்தினர் தரப்பிலான ஒரு புதிய டீமான் ஸ்கிரிப்ட்டை ஏற்றி, அவற்றின் வெளியீட்டை வழங்கிக்கு பரிமாற்றம் செய்கிறது. இந்த முறை SSH ஐ விட பாதுகாப்பானதும் வேகமானதும் ஆகும், மேலும் இதற்கு வழங்கிக்கும் விருந்தினருக்கும் இடையே IP-நிலை பிணைய இணைப்பு தேவையில்லை. இந்த வசதியைச் சோதிக்க, இந்தக் கட்டளையை இயக்கவும்:
    stap --remote=libvirt://MyVirtualMachine
  • அதுமட்டுமின்றி, SystemTap இன் கண்டறிதல் செய்திகளுக்கு பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
    • இப்போது பல பிழைச் செய்திகள் அவற்றுக்கு தொடர்புடைய உதவிப் பக்கங்களுக்கான குறுக்குக் குறிப்புகளைக் கொண்டுள்ளன. இந்தப் பக்கங்கள் பிழைகளையும் அவற்றுக்கு பரிந்துரைக்கப்படும் திருத்தங்களையும் விளக்குகின்றன.
    • ஒரு ஸ்கிரிப்ட் உள்ளீட்டில் டைப்போகிராஃபிக் பிழைகள் இருப்பதாக சந்தேகம் உருவானால், பயனருக்கு ஒரு வரிசைப்படுத்தப்பட்ட ஆலோசனைப் பட்டியல் வழங்கப்படுகிறது. பயனர் குறிப்பிட்ட பெயர்கள், புரோப் செய்த சார்புப் பெயர்கள், மார்க்கர்கள், மாறிகள், கோப்புகள், புனைப்பெயர்கள் மற்றும் பிற பெயர்களுக்கு ஏற்கத்தக்க பெயர்களுக்குப் பொருந்தாத பல சூழ்நிலைகளில் இந்த ஆலோசனை வசதி பயன்படுகிறது.
    • கண்டறிதல்களில் பிரதிகளை நீக்கும் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • செய்திகள் இன்னும் புரிய எளிதாகும் வகையில் ANSI வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.

12.4.3. Valgrind

Red Hat Enterprise Linux 7.0 இல் பயன்பாடுகளின் தனியமைப்புகளை உருவாக்குவதற்கான பல கருவிகளை வழங்கும் கருவியாக்க சட்டமைப்பான Valgrind உள்ளது. இந்தப் பதிப்பானது Valgrind 3.9.0 வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது, மேலும் இதில் Valgrind 3.8.1 ஐ அடிப்படையகாக் கொண்டமைந்த Red Hat Enterprise Linux 6 மற்றும் Red Hat Developer Toolset 2.0 வகையறாக்களுடன் ஒப்பிடுகையில் பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது.
Red Hat Enterprise Linux 7.0 இல் சேர்க்கப்பட்டுள்ள Valgrind இன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
  • DFP வசதி நிறுவப்பட்டுள்ள வழங்கிகளில் IBM System z தசம ஃப்ளோட்டிங் பாயின்ட் வழிமுறைகளுக்கான ஆதரவு.
  • IBM POWER8 (Power ISA 2.07) வழிமுறைகளுக்கான ஆதரவு.
  • Intel AVX2 வழிமுறைகளுக்கான ஆதரவு. இது 64-பிட் கட்டமைப்புகளில் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • கட்டுப்படுத்தப்பட்ட பரிவர்த்தனை நினைவகம் (RTM) மற்றும் வன்பொருள் பூட்டு எலிஷன் (HLE) ஆகிய இரண்டு Intel பரிவர்த்தனை ஒத்திசைவு நீட்சிகளுக்கும் தொடக்க ஆதரவு.
  • IBM PowerPC இல் வன்பொருள் பரிவர்த்தனை நினைவகத்திற்கான தொடக்க ஆதரவு.
  • பரிவர்த்தனை தேக்ககத்தின் முன்னிருப்பு அளவு 16 பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, இது பெரிய பயன்பாடுகளுக்கு அதிக அளவிலான குறியீடுகளின் கருவியாக்கம் மற்றும் சேமிப்பு தேவைப்படும் என்பதைக் காட்டுகிறது. இதே போன்ற காரணங்களுக்காக, பரிவர்த்தனை தேக்ககத்தில், கண்காணிக்கப்படக்கூடிய நினைவக மேப் செய்யப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கையை --num-transtab-sectors என்ற புதிய கொடி மூலம் கட்டுப்படுத்த முடியும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
  • இனி Valgrind முழு பொருளின் மேப்பிங்கிலிருந்து வாசிப்பதற்காக, அப்படி ஒன்றை தற்காலிகமாக உருவாக்காது. மாறாக, வாசிக்கும் செயலானது சிறிய நிலையான அளவிலான இடையகத்தின் மூலம் செய்யப்படுகிறது. இது Valgrind பெரிய பகிரப்பட்ட பொருள்களிலிருந்து வழுநீக்கத் தகவலைப் படிக்கும் போது மெய்நிகர் நினைவக ஸ்பைக்குகள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
  • இப்போது பயன்படுத்தப்பட்ட அமுக்கங்களின் பட்டியலில் (-v விருப்பம் குறிப்பிடப்படும் போது காண்பிக்கப்படும்) ஒவ்வொரு பயன்படுத்தப்பட்ட அமுக்கங்களுக்கும், கோப்புப் பெயர் மற்றும் அமுக்கம் எங்கு வரையறுக்கப்பட்டுள்ளதோ அந்த வரியின் எண் ஆகியவை காண்பிக்கப்படுகின்றன.
  • இப்போது ஜஸ்ட்-இன்-டைம் (JIT) கம்பைலர் மொழிபெயர்க்க முடியாத ஒரு வழிமுறையை எதிர்கொள்ளும் போது ஒரு கண்டறிதல் செய்தி அச்சிடப்பட வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்த --sigill-diagnostics என்ற ஒரு புதிய கொடியைப் பயன்படுத்த முடியும். உண்மையான செயல்குணம் — SIGILL சமிக்ஞையை பயன்பாட்டுக்கு வழங்கும் செயல் — மாற்றப்படவில்லை.
  • Memcheck கருவி பின்வரும் அம்சங்கள் சேர்த்து மேம்படுத்தப்பட்டுள்ளது:
    • வெக்டரைஸ் செய்யப்பட்ட குறியீடுகளின் கையாளுதலில் மேம்பாடுகளின் காரணமாக தவறான பிழை அறிக்கைகள் கணிசமாகக் குறையும். இந்த மாற்றங்களின் ஆதாயங்களைப் பெற --partial-loads-ok=yes கொடியைப் பயன்படுத்தவும்.
    • லீக் செக்கரின் மீதான கட்டுப்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த வகையான லீக் நிகழ்வுகளை (வரையறுக்கப்பட்ட/மறைமுகமான/சாத்தியமுள்ள/அடையத்தக்க) காண்பிக்க வேண்டும், பிழைகளாகக் கருதவேண்டும் மற்றும் கொடுக்கப்பட்ட ஒரு லீக் அமுக்கத்தின் மூலம் அமுக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் இப்போது குறிப்பிட முடியும். அமுக்க உள்ளீடுகளில் முறையே --show-leak-kinds=kind1,kind2,.., --errors-for-leak-kinds=kind1,kind2,.. ஆகிய விருப்பங்கள் மற்றும் கட்டாயமற்ற match-leak-kinds: வரியைப் பயன்படுத்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது.
      ஒருவாக்கப்பட்ட லீக் அமுக்கங்களில் இந்த புதிய வரி உள்ளது என்பதையும் இதன் காரணமாக இது முந்தைய வெளியீடுகளை விட அதிக பிரத்யேகத்தன்மை வாய்ந்தது என்பதையும் நினைவில் கொள்ளவும். முந்தைய வெளியீடுகளில் இருந்ததைப் போன்ற அதே செயல்குணத்தைப் பெற, உருவாக்கப்பட்ட அமுக்கங்களைப் பயன்படுத்தும் முன்பு அவற்றிலிருந்து match-leak-kinds: வரியை நீக்கவும்.
    • இன்னும் மேம்பட்ட விதிமுறைகளின் பயன்பாட்டின் மூலம் லீக் செக்கரிடம் இருந்து சாத்தியமுள்ள லீக் அறிக்கைகளின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. கிடைக்கின்ற விதிமுறைகளானவை பல உள்ளீட்டுத்தன்மைகளைப் பயன்படுத்தி, செல்லுபடியான அக பாயின்ட்டர்களின் கண்டறிதலை std::stdstring க்கும், டிஸ்ட்ரக்ட்டர்களைக் கொண்டுள்ள கூறுகளுடனுள்ள new[] ஒதுக்கீடு செய்யப்பட்ட தரவணிகளுக்கும் C++ பொருளின் அகப் பகுதியைச் சுட்டும் பாயின்ட்டர்களுக்கும் வழங்குகிறது. --leak-check-heuristics=heur1,heur2,... விருப்பத்தைப் பயன்படுத்தி அவற்றை தனித்தனியாக தேர்ந்தெடுக்க முடியும்.
    • ஹீப்-அல்லொக்கேட்டட் ப்ளாக்குகளுக்கான ஸ்டேக்டிரேஸ் அக்விசிஷனின் கட்டுப்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. --keep-stacktraces விருப்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு அல்லொகேஷன் மற்றும் டி-அல்லொகேஷனுக்கும் ஒரு ஸ்டேக் டிரேஸ் பெறப்பட்டதா என தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்த முடியும். இதனால் சிறப்பான "விடுவித்த பிறகு பயன்பாடு" பிழைகளை உருவாக்க அல்லது குறைந்த தகவலைப் பதிவு செய்வதன் மூலம் வால்க்ரைன்ட்ஸ் வள பயனளவைக் குறைக்க முடியும்.
    • லீக் அமுக்கப் பயன்பாட்டின் அறிக்கையிடல் சிறப்பாக்கப்பட்டுள்ளது. இப்போது பயன்படுத்தப்பட்ட அமுக்கங்களின் பட்டியலில் (-v விருப்பம் குறீப்பிடப்பட்டால் காண்பிக்கப்படுவது), ஒவ்வொரு லீக் அமுக்கங்களுக்கும், அந்த அமுக்கம் கடந்த லீக் தேடலின் போது எத்தனை ப்ளாக்குகள் மற்றும் பைட்டுகளை அம்முக்கியது என்பதும் காண்பிக்கப்படுகிறது.
  • வேல்கிரைன்ட் GDB சேவையக ஒருங்கிணைப்பானது, பின்வரும் கண்காணிப்புக் கட்டளைகள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது:
    • v.info open_fds என்னும் புதிய கண்காணிப்புக் கட்டளை திறந்துள்ள கோப்பு விவரிப்பான்களின் பட்டியலையும் கூடுதல் விவரங்களையும் வழங்குகிறது.
    • v.info execontext எனும் புதிய கண்காணிப்புக் கட்டளை வேல்கிரைன்ட் பதிவு செய்த ஸ்டேக் டிரேஸ் பற்றிய தகவலைக் காண்பிக்கிறது.
    • v.do expensive_sanity_check_general எனும் புதிய கண்காணிப்புக் கட்டளை, சிலஉள்ளமை இசைவு சோதனைகளை மேற்கொள்ளப் பயன்படுகிறது.

12.5. நிரலாக்க மொழிகள்

Ruby 2.0.0

Red Hat Enterprise Linux 7.0 சமீபத்திய Ruby பதிப்பு, 2.0.0 ஐ வழங்குகிறது. பதிப்பு 2.0.0 மற்றும் Red Hat Enterprise Linux 6 இல் சேர்க்கப்பட்டிருந்த பதிப்பு 1.8.7 ஆகியவற்றுக்கு இடையிலான மிக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பின்வருமாறு:
  • YARV (மற்றுமொரு Ruby VM) எனும் புதிய இன்டர்பிரட்டர், ஏற்ற நேரத்தை, குறிப்பாக பெரிய கிளையமைப்புகள் அல்லது கோப்புகளைக் கொண்ட பயன்பாடுகளுக்கு கணிசமாகக் குறைக்கிறது.
  • புதிய மற்றும் வேகமான "லேஸி ஸ்வீப்" குப்பை சேகரிப்புக் கருவி.
  • இப்போது Ruby சர குறியீடாக்கத்தை ஆதரிக்கிறது.
  • இப்போது Ruby கிரீன் தொடரிழைகளுக்கு பதிலாக நேட்டிவ் தொடரிழைகளை ஆதரிக்கிறது.
Ruby 2.0.0 பற்றிய கூடுதல் தகவலுக்கு, திட்டப்பணியின் அப்ஸ்ட்ரீப் பக்கங்களைப் பார்க்கவும்: https://www.ruby-lang.org/en/.

Python 2.7.5

Red Hat Enterprise Linux 7.0 இல் சமீபத்திய Python 2.7 வரிசை வெளியீடான Python 2.7.5 சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பில் செயல்திறனில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அத்துடன் Python 3 க்கான முன்னோக்கு இணக்கத்தன்மையும் உள்ளது. Python 2.7.5 இல் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பின்வருமாறு:
  • வரிசைப்படுத்தப்பட்ட அகராதி வகை
  • வேகமான I/O தொகுதிக்கூறு
  • தொகுதி மற்றும் அகராதி புரிதல்கள்
  • sysconfig தொகுதிக்கூறு
மாற்றங்களின் முழுமையான பட்டியலுக்கு http://docs.python.org/dev/whatsnew/2.7.html ஐப் பார்க்கவும்

Java 7 மற்றும் Multiple JDKs

Red Hat Enterprise Linux இல் முன்னிருப்பு Java டெவலப்மென்ட் கிட்டாக (JDK) OpenJDK7 இடம்பெற்றுள்ளது, மேலும் Java 7 முன்னிருப்பு Java பதிப்பாக திகழ்கிறது. Java 7 தொகுப்புகள் (java-1.7.0-openjdk, java-1.7.0-oracle, java-1.7.0-ibm) அனைத்தும் கெர்னலுக்கு ஒத்த விதத்தில் இணையாக பல பதிப்புகளை நிறுவ அனுமதிக்கின்றன.
இணையாக பல நிறுவல்களைச் செய்யும் இவ்வசதியால், பயனர்கள் செயல்திறனை மேம்படுத்தவும் தேவைப்பட்டால் சிக்கல்களை வழுநீக்கம் செய்யவும், ஒரே சமயத்தில் ஒரே JDK வின் பல பதிப்புகளை முயற்சித்துப் பார்க்க முடிகிறது. துல்லியமான JDK வை முன்பைப் போலவே alternatives மூலம் தேர்ந்தெடுக்க முடியும்.

பாடம் 13. பிணையமாக்கல்

இணைய அணியாக்கம்

தொடுப்பு சேகரத்திற்கான பிணைப்பாக்கத்திற்கு மாற்றாக பிணைய அணியாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பராமரிக்கவும், வழுநீக்கவும் விரிவாக்கவும் எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனருக்கு இது செயல்திறன் மற்றும் நெகிழ்தன்மை மேம்பாடுகளை வழங்குகிறது, மேலும் எல்லா புதிய நிறுவல்களுக்கும் இதனை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

NetworkManager

NetworkManager பயன்பாட்டை சேவையக பயன்பாடுகளில் பயன்படுத்த ஏற்றதாக்கும் வகையில் அதில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, NetworkManager இனி முன்னிருப்பாக, திருத்திகள் அல்லது தயாரமைப்பு கருவிகளால் செய்யப்படும் மாற்றங்களைப் போன்ற, அமைவாக்கக் கோப்பிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என கவனிக்காது. அது நிர்வாகிகள் nmcli connection reload கட்டளை மூலம் வெளிப்புற மாற்றங்களை அறியச் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும்NetworkManager இன் D-Bus API அல்லது NetworkManager கட்டளைமுறைக் கருவி, nmcli ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் மாற்றங்கள் உடனடியாக விளைவாகும்.
பயனர்களும் ஸ்கிரிப்ட்டுகளும் NetworkManager உடன் தொடர்புகொள்ள அனுமதிப்பதற்காக nmcli கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

chrony தொகுப்பு

பழமையான நிரந்தர பிணையமாக்கப்பட்ட, எப்போதும் இயக்கத்திலுள்ள, அர்ப்பணிப்பான சேவையக வகை போன்ற வகைகளுக்குள் பொருந்தாத கணினிகளில் கணினி கடிகாரத்தைப் புதுப்பிக்க chrony சிறு பயன்பாடுகள் தொகுப்பு உள்ளது. அடிக்கடி இடைநிறுத்தப்படும் அல்லது மற்றபடி அடிக்கடி துண்டிக்கப்பட்டு மீண்டும் பிணையத்துடன் இணைக்கப்படும் கணினிகள் அனைத்துக்கும் chrony ஐப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம். உதாரணமாக மொபைல் மற்றும் மெய்நிகர் கணினிகளைக் குறிப்பிடலாம்.

செயல்நிலை ஃபயர்வால் டீமான், firewalld தொகுப்பு

Red Hat Enterprise Linux 7.0 செயல்நிலை ஃபயர்வால் டீமான், firewalld ஐ வழங்குகிறது, இது ஒரு பிணையத்திற்கும் அதனுடன் தொடர்புடைய இணைப்புகள் மற்றும் இடைமுகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நம்பகத்தன்மை நிலையைக் குறித்தமைக்கப் பயன்படும் பிணைய "மண்டலங்கள்" அம்சத்திற்கான ஆதரவுள்ள, செயல்நிலையில் நிர்வகிக்கக்கூடிய ஃபயர்வாலை வழங்குகிறது. இது IPv4 மற்றும் IPv6 ஃபயர்வால் அமைவுகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது ஈத்தர்னெட் பிரிட்ஜுகளை ஆதரிக்கிறது, மேலும் இயக்க நேர மற்றும் நிரந்தர அமைவாக்க விருப்பங்களைத் தனித்தனியாகக் கொண்டுள்ளது. இது சேவைகள் அல்லது பயன்பாடுகளை நேரடியாக ஃபயர்வால் விதிகளில் சேர்ப்பதற்கான இடைமுகத்தையும் கொண்டுள்ளது.

DNSSEC

DNSSEC என்பது டொமைன் பெயர் முறைமை பாதுகாப்பு நீட்சிகளின் தொகுப்பாகும் (DNSSEC). இது DNS கிளையன், DNS பெயர்சேவையகத்திலிருந்து கிடைக்கும் பதில்களை அங்கீகரிக்கவும், தொடக்க இடத்தை சரிபார்க்கவும், கடந்து வருகையில் அவை ஏதேனும் குறுக்கீட்டை எதிர்கொண்டதா என்று தீர்மானிக்கவும் உதவுகிறது.

OpenLMI

Red Hat Enterprise Linux 7.0 இல் OpenLMI திட்டப்பணி இடம்பெற்றுள்ளது. இது Linux கணினிகளின் நிர்வாகத்திற்கான ஒரு பொதுவான அகக்கட்டமைப்பை வழங்குகிறது. இது பயனர்கள் வன்பொருள், இயக்க முறைமைகள் மற்றும் கணினி சேவைகளை அமைவாக்கம் செய்யவும் நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் உதவுகிறது. உற்பத்தி சேவையகங்களை அமைவாக்கம் செய்து நிர்வகிக்கும் பணியை எளிமைப்படுத்துவதற்காக OpenLMI உள்ளது.
Red Hat Enterprise Linux இன் பல பதிப்புகளுக்கு ஒரு பொதுவான நிர்வாக இடைமுகத்தை வழங்குவதற்காகவே OpenLMI வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முன்பே உள்ள கருவிகளின் மேல் மட்டத்தில் ஒரு அடுக்காக அமைந்து, அடித்தளத்திலுள்ள அமைப்பின் மிகுந்த சிக்கலான தோற்றத்தை கணினி நிர்வாகிகளிடமிருந்து மறைக்கிறது.
OpenLMI இல் உள்ளவை: நிர்வகிக்கப்படும் கணினியில் நிறுவப்பட்டுள்ள கணினி நிர்வாக முகவர்களின் தொகுப்பு, முகவர்களை நிர்வகித்து அவற்றுக்கு ஒரு இடைமுகத்தை அளிக்கின்ற OpenLMI கன்ட்ரோலர் மற்றும் OpenLMI கன்ட்ரோலர் மூலமாக கணினி நிர்வாக முகவர்களை அழைத்துப் பயன்படுத்தும் கிளையன் பயன்பாடுகள் அல்லது ஸ்கிரிப்ட்டுகள் ஆகியவை.
OpenLMI மூலம் பயனர்கள் இவற்றைச் செய்ய முடிகிறது:
  • பேர்-மெட்டல் உற்பத்தி சேவையகங்கள் மற்றும் மெய்நிகர் கணினி விருந்தினர்கள் ஆகியவற்றை அமைவாக்கம் செய்யலாம், நிர்வகிக்கலாம், கண்காணிக்கலாம்;
  • உள்ளமைந்த அல்லது தொலைநிலை கணினிகளை அமைவாக்கம் செய்யலாம், நிர்வகிக்கலாம், கண்காணிக்கலாம்;
  • சேமிப்பகத்தையும் பிணையங்களையும் அமைவாக்கம் செய்யலாம், நிர்வகிக்கலாம், கண்காணிக்கலாம்;
  • C/C++, Python, Java அல்லது கட்டளைமுறை இடைமுகத்திலிருந்து கணினி நிர்வாக செயலம்சங்களை வரவழைத்துப் பயன்படுத்தலாம்.
OpenLMI மென்பொருள் வழங்குநரானது ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாகவே ஆதரிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த மென்பொருள் முழு செயல் வசதிகளைக் கொண்டது, இருப்பினும் சில செயல்பாடுகள் அதிக கணினி வளங்களைப் பயன்படுத்தக்கூடும்.
OpenLMI பற்றிய கூடுதல் தகவலுக்கு, http://www.openlmi.org ஐப் பார்க்கவும்.

qlcnic இயக்கியில் SR-IOV செயலம்சம்

qlcnic இயக்கியில் சிங்கிள் ரூட் I/O மெய்நிகராக்கம் (SR-IOV) தொழில்நுட்ப முன்னோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலம்சத்திற்கான ஆதரவை QLogic நேரடியாக வழங்கும், QLogic க்கும் Red Hat க்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். qlcnic இயக்கியில் உள்ள மற்ற செயலம்சங்கள் எப்போதும் போல முழுவதுமாக ஆதரிக்கப்படும்.

FreeRADIUS 3.0.1

Red Hat Enterprise Linux 7.0 இல் FreeRADIUS பதிப்பு 3.0.1 சேர்க்கப்பட்டுள்ளது. இது பல புதிய அம்சங்களை வழங்குகிறது, அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
  • RADIUS தரவுவிளக்கப் படங்களை TCP மற்றும் TLS வழியாக அனுப்புவதற்கான நெறிமுறையான RadSec.
  • Yubikey ஆதரவு.
  • இணைப்பு தொகுப்பாக்கம். radiusd சேவையகம் பல வகையான பின்புல முறைமைகளுக்கான (SQL, LDAP மற்றும் பிற) இணைப்புகளைப் பராமரிக்கிறது. இணைப்பு தொகுப்பாக்கம், குறைந்த வளப் பயன்பாட்டைக் கொண்டு அதிக ஒப்பு வெளியீட்டைக் கொடுக்கிறது.
  • சேவையகத்தின் அமைவாக்க நிரலாக்க மொழியான unlang இன் தொடரியல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • தளம்-சார்ந்த மற்றும் விற்பனையாளர்-சார்ந்த பண்புக்கூறுகளுக்கான ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • விரிவான வெளியீட்டில் சிக்கல்களை தனிப்படுத்திக் காட்டுகின்ற வகையில் வழுநீக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • SNMP டிராப் உருவாக்கம்.
  • WIMAX ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • EAP-PWD ஆதரவு.

நம்பகமான பிணைய இணைப்பு

Red Hat Enterprise Linux 7.0 நம்பகமான பிணைய இணைப்பு செயலம்சத்தை தொழில்நுட்ப முன்னோட்டமாக அறிமுகப்படுத்துகிறது. நம்பகமான பிணைய இணைப்பு செயலம்சமானது TLS, 802.1x அல்லது IPSec போன்ற தற்போதுள்ள பிணைய அணுகல் கட்டுப்பாட்டு (NAC) வசதிகளுடன் சேர்த்து, இறுதிப்புள்ளி நிலையமைவு மதிப்பீட்டை ஒருங்கிணைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது; அதாவது இறுதிப் புள்ளியின் கணினி தகவல்களைச் சேகரித்தல் (இயக்க முறைமை அமைவாக்க அமைவுகள், நிறுவப்பட்டுள்ள தொகுப்புகள் மற்றும் பிற ஒருங்கிணைப்பு அளவீடுகள் எனப்படும் பிற தகவல்கள் போன்றவை). நம்பகமான பிணைய இணைப்பு செயலம்சமானது, பிணையத்தை அணுக ஒரு இறுதிப்புள்ளியை அனுமதிக்கும் முன்பு, இந்த அளவீடுகளை பிணைய அணுகல் கொள்கைகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க பயன்படுகிறது.

பாடம் 14. வள நிர்வாகம்

கட்டுப்பாட்டுக் குழுக்கள்

Red Hat Enterprise Linux 7.0 இல் கட்டுப்பாட்டுக் குழுக்கள் உள்ளன, இது வள நிர்வாகத்திற்காக, பெயரிடப்பட்ட குழுக்களின் கிளையமைப்பில் உள்ள செயலாக்கங்களை ஒழுங்குபடுத்தும் கருத்தியலாகும். இக்கருத்தியலானது, செயலாக்கங்களை அதிகாரப்படிநிலையின் படி குழுப்படுத்தவும் இந்தக் குழுக்களுக்கு வள வரம்புகளை செயல்படுத்தவும் வசதியை அளிக்கிறது. Red Hat Enterprise Linux 7.0 இல், கட்டுப்பாட்டுக் குழுக்கள் systemd ஆல் பிரத்யேகமாக நிர்வகிக்கப்படுகின்றன. cgroups ஆனது systemd யூனிட் கோப்புகளில் அமைவாக்கம் செய்யப்படுகின்றன, மேலும் அவற்றை systemd இன் கட்டளைமுறை இடைமுக (CLI) கருவிகளின் மூலம் நிர்வகிக்க முடியும்.
கட்டுப்பாட்டுக் குழுக்கள் பற்றியும் வள நிர்வாக அம்சங்கள் பற்றியும் வள நிர்வாக வழிகாட்டியில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

பாடம் 15. அங்கீகாரம் மற்றும் இடைசெயல் தன்மை

புதிய நம்பக செயல்படுத்தல்

இப்போது Red Hat Enterprise Linux 5.9 கிளையன்கள் மற்றும் பிறகான பதிப்புகள் மற்றும் Red Hat Enterprise Linux 6.3 கிளையன்களுக்கு, பயனர் பாதுகாப்பு அடையாளங்காட்டியிலிருந்து உருவாக்கப்படும் பயனர் ID மற்றும் குழு ID ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பதில், செயல்மிகு கோப்பகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பயனர் ID அல்லது குழு ID ஐப் பயன்படுத்த ஆதரிக்கப்படுகிறது. செயல்மிகு கோப்பகத்தில் POSIX பண்புக்கூறுகள் வரையறுக்கப்பட்டிருந்தால், இந்த நம்பக செயல்படுத்தலைப் பயன்படுத்த முடியும்.

slapi-nis துணை நிரல் புதுப்பிக்கப்பட்டுள்ளது

Red Hat Enterprise Linux 7.0 இல் புதுப்பிக்கப்பட்ட கோப்பக சேவையக துணை நிரலான slapi-nis இடம்பெற்றுள்ளது, அது செயல்மிகு கோப்பகத்தின் பயனர்கள் பழமையான கிளையன்களில் அங்கீகரிக்க அனுமதிக்கிறது. இந்த செயலம்சம் ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமே ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

IPA க்கான மறுபிரதி மற்றும் மீட்பு இயங்கம்சம்

Red Hat Enterprise Linux 7.0 இல் IPA தொகுப்புக்கான மறுபிரதி மற்றும் மீட்பு இயங்கம்சம் ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக இடம்பெற்றுள்ளது.

Samba 4.1.0

Red Hat Enterprise Linux 7.0 இல் samba தொகுப்புகள் சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்புக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளன, இதனால் பல வழு நீக்கங்களும் மேம்பாடுகளும் கிடைக்கின்றன, சேவையக மற்றும் கிளையன் கருவிகளில் SMB3 நெறிமுறைக்கான ஆதரவை அவற்றில் குறிப்பிடத்தக்கதாகக் கூறலாம்.
கூடுதலாக, SMB3 போக்குவரத்து, SMB3 ஐ ஆதரிக்கும் Windows சேவையகங்கள் மற்றும் Samba சேவையகங்களுக்கு மறைகுறியாக்கப்பட்ட போக்குவரத்து இணைப்புகளை உருவாக்கும் வசதியை அளிக்கிறது. Samba 4.1.0 இல் சேவையகத் தரப்பிலான நகலெடுத்தல் செயல்பாடுகளையும் ஆதரிக்கிறது. சமீபத்திய Windows வெளியீடுகள் போன்ற சேவையகத் தரப்பு நகலெடுத்தல் ஆதரவைப் பயன்படுத்தும் கிளையன்களின் நகலெடுத்தல் செயல்களில் கணிசமான செயல்திறன் மேம்பாட்டைக் காணலாம்.

எச்சரிக்கை

புதுப்பிக்கப்பட்ட samba தொகுப்புகள், முன்பே கைவிடப்பட்ட அமைவாக்கக் கருவிகள் சிலவற்றை அகற்றுகிறது. அவற்றில் முக்கியமானவை சில பங்குகளாகும்security = share மற்றும் security = server. வலை அமைவாக்கக் கருவி SWAT முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது. Samba 4.0 மற்றும் 4.1 வெளியீட்டுக் குறிப்புகளில் மேலும் விவரங்களைப் பெறலாம்:
சில tdb கோப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது நீங்கள் smbd டீமானின் புதிய பதிப்பைத் தொடங்கிய உடனே அனைத்து tdb கோப்புகளும் தரமுயர்த்தப்படுகின்றன. உங்களிடம் tdb கோப்புகளின் மறுபிரதி இல்லாவிட்டால், நீங்கள் பழைய Samba பதிப்புக்கு தரமிறக்க முடியாது.
இந்த மாற்றங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ளSamba 4.0 மற்றும் 4.1 க்கான வெளியீட்டுக் குறிப்புகளைக் காணவும்.

AD மற்றும் LDAP sudo வழங்குநர்களின் பயன்பாடு

AD வழங்குநர் என்பது, செயல்மிகு கோப்பக சேவையகத்திற்கு இணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பின்புல முறைமையாகும். Red Hat Enterprise Linux 7.0 இல், AD sudo வழங்குநரை LDAP வழங்குநருடன் சேர்த்துப் பயன்படுத்துதல் தொழில்நுட்ப முன்னோட்டமாக ஆதரிக்கப்படுகிறது. AD sudo வழங்குநரை செயல்படுத்த, sssd.conf கோப்பின் டொமைன் பிரிவில் sudo_provider=ad அமைவை சேர்க்கவும்.

பாடம் 16. பாதுகாப்பு

OpenSSH chroot ஷெல் புகுபதிவுகள்

பொதுவாக, ஒவ்வொரு Linux பயனரும் SELinux கொள்கையைப் பயன்படுத்தி ஒரு SELinux பயனருக்கு மேப் செய்யப்பட்டுள்ளார், இதனால் Linux பயனர்கள் எப்போதும் SELinux பயனர்களில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். Linux பயனர்கள் SELinux unconfined_u பயனருக்கு மேப் செய்யப்படுகின்ற ஒரு முன்னிருப்பு மேப்பிங்கும் உள்ளது.
Red Hat Enterprise Linux 7 இல், கட்டுப்படுத்தப்படாத பயனர்களுடன் எந்த மாற்றமும் இன்றி பயனர்களை chrooting செய்வதற்கு ChrootDirectory விருப்பத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் staff_u, user_u அல்லது guest_u போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பயனர்களுக்கு, SELinux selinuxuser_use_ssh_chroot மாறி அமைக்கப்பட வேண்டும். அதிக பாதுகாப்பை அடைவதற்காக நிர்வாகிகள் ChrootDirectory விருப்பத்தைப் பயன்படுத்தும் போது, chrooted பயனர்கள் அனைவருக்கும் guest_u ஐப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேவைப்படும் பல அங்கீகாரங்கள்

Red Hat Enterprise Linux 7.0 ஆனது SSH நெறிமுறை பதிப்பு 2 இல் AuthenticationMethods விருப்பத்தைப் பயன்படுத்தி தேவைப்படும் பல அங்கீகார வசதியை ஆதரிக்கிறது. இந்த விருப்பம், ஒன்று அல்லது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட அங்கீகார முறை பெயர்களின் பட்டியல்களை பட்டியலிடுகிறது. அங்கீகரித்த நிறைவு பெற, ஏதேனும் பட்டியலில் உள்ள அனைத்து முறைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட வேண்டும். இதனால் உதாரணமாக, ஒரு பயனருக்கு கடவுச்சொல் அங்கீகார வாய்ப்பு அளிக்கப்படும் முன்பு பொது விசை அல்லது GSSAPI அங்கீகரிக்கும் தேவை நிர்ப்பந்திக்கப்படுதல் போன்ற வசதிகள் கிடைக்கின்றன.

GSS பதிலி

GSS பதிலி என்பது பிற பயன்பாடுகளின் சார்பாக GSS API கெர்பரோஸ் சூழலை அமைக்கும் கணினி சேவையாகும். இது பல பாதுகாப்பு ஆதாயங்களை வழங்குகிறது; உதாரணமாக, கணினி keytab க்கான அணுகலை பல செயலாக்கங்கள் பகிர்ந்துகொண்டுள்ளபட்சத்தில், அந்த செயலாக்கத்தின் மீதான ஒரு தாக்குதல் வெற்றிகரமானால் Kerberos மற்ற செயலாக்கங்கள் அனைத்தையும் போல பாசாங்கு செய்யும்.

NSS இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

nss தொகுப்புகள் அப்ஸ்ட்ரீம் பதிப்பு 3.15.2 க்கு தரமேற்றப்பட்டுள்ளது. மெசேஜ்-டைஜஸ்ட் படிமுறை 2 (MD2), MD4 மற்றும் MD5 கையொப்பங்கள் இனி ஆன்லைன் சான்றிதழ் நிலை நெறிமுறை (OCSP) அல்லது சான்றிதழ் திரும்பப்பெறல் பட்டியல்கள் (CRLகள்) போன்றவற்றுக்கு ஏற்கப்படுவதில்லை, அவை பொது சான்றிதழ் கையொப்பங்களுக்கான தங்கள் கையாளுகையுடன் இசைவாக உள்ளன.
TLS 1.2 பேரம் செய்யப்படும் போது பயன்படுத்துவதற்காக அட்வான்ஸ்டு என்கிரிப்ஷன் ஸ்டான்டர்ட் காலோயிஸ் கவுன்ட்டர் மோடு (AES-GCM) சிஃபர் சூட் (RFC 5288 மற்றும் RFC 5289) சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இப்போது பின்வரும் சிஃபர் சூட்கள் ஆதரிக்கப்படுகின்றன:
  • TLS_ECDHE_ECDSA_WITH_AES_128_GCM_SHA256
  • TLS_ECDHE_RSA_WITH_AES_128_GCM_SHA256
  • TLS_DHE_RSA_WITH_AES_128_GCM_SHA256
  • TLS_RSA_WITH_AES_128_GCM_SHA256

SCAP ஒர்க்பென்ச்

SCAP ஒர்க்பென்ச் என்பது SCAP உள்ளடக்கத்திற்கு ஸ்கேனிங் செயலம்சத்தை வழங்கும் GUI முன்புலமாகும். Red Hat Enterprise Linux 7.0 இல் SCAP ஒர்க்பென்ச் தொழில்நுட்ப முன்னோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.
அப்ஸ்ட்ரீம் திட்டப்பணியின் வலைத்தளத்தில் நீங்கள் விரிவான தகவலைப் பெறலாம்:

OSCAP Anaconda துணை நிரல்

Red Hat Enterprise Linux 7.0 OSCAP Anaconda துணை நிரலை ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக அறிமுகப்படுத்துகிறது. இந்தத் துணை நிரலானது OpenSCAP பயன்பாடுகளை நிறுவல் செயலுடன் ஒருங்கிணைத்து, SCAP உள்ளடக்கம் வழங்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியபடி கணினி நிறுவலை செய்ய உதவுகிறது.

பாடம் 17. சந்தா நிர்வாகம்

Red Hat சந்தா நிர்வாக சேவைகளைப் பயன்படுத்தி Red Hat Enterprise Linux 7.0 கிடைக்கப்பெறுகிறது. உங்கள் Red Hat Enterprise Linux 7.0 கணினியை Red Hat சந்தா நிர்வாகத்திற்கு எப்படி பதிவு செய்வது என்பது பற்றிய விரிவான மேலோட்டத் தகவல் பின்வரும் தகவல் களஞ்சியக் கட்டுரையில் உள்ளது.

சான்றிதழ்-அடிப்படையிலான உரிமங்கள்

Red Hat Enterprise Linux 7.0 ஆனது subscription-manager கருவியின் மூலம் புதிய சான்றிதழ்-அடிப்படையிலான உரிமங்களை ஆதரிக்கிறது. Red Hat Enterprise Linux 5 மற்றும் 6 ஐப் பயன்படுத்தும் பயனர்களுக்கு நிலைமாற்றத்தை அளிப்பதற்காக, Satellite பயனர்களுக்கு பழைய உரிமங்களும் ஆதரிக்கப்படுகின்றன. Red Hat Enterprise Linux 7.0 இல், rhn_register அல்லது rhnreg_ks கருவிகளைப் பயன்படுத்தி Red Hat Network Classic இல் பதிவு செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பிட்ட இந்தக் கருவிகளை நீங்கள் Red Hat Satellite அல்லது Proxy பதிப்புகள் 5.6 இல் மட்டுமே பயன்படுத்த முடியும்.

பாடம் 18. பணிமேடை

18.1. GNOME 3

Red Hat Enterprise Linux 7.0 இல் GNOME பணிமேடையின் அடுத்த பெரிய பதிப்பான GNOME 3 உள்ளது. GNOME 3 இன் பயனர் அனுபவமானது பெரும்பங்கு GNOME ஷெல்லால் வரையறுக்கப்பட்டதாகிறது, இது GNOME 2 பணிமேடை ஷெல்லுக்கு பதில் இடம்பெற்றுள்ளது. சாளர நிர்வாகம் மட்டுமின்றி GNOME ஷெல் திரையில் மேல் பட்டியையும் வழங்குகிறது, அதில் மேல் வலது பகுதியில் 'கணினி நிலை' பகுதி, ஒரு கடிகாரம் மற்றும் சாளரங்களையும் பயன்பாடுகளையும் விரைவில் அணுக உதவும்செயல்பாடுகள் மேலோட்டத்திற்கு மாறுகின்ற ஹாட் கார்னரும் உள்ளன.
Red Hat Enterprise Linux 7.0 இல் GNOME கிளாஸிக் முன்னிருப்பு GNOME ஷெல் இடைமுகமாகும், இதில் திரையின் அடிப்பகுதியில் ஒரு சாளரப் பட்டியலும் வழக்கமாக இருக்கும் பயன்பாடுகள் மற்றும் இடங்கள் மெனுக்களும் இருக்கும்.
GNOME 3 பற்றி மேலும் தகவலறிய, GNOME உதவியைப் பார்க்கவும். உதவியை அணுக, Super (Windows) விசையை அழுத்தி செயல்பாடுகள் மேலோட்டத்திற்கு சென்று, help எனத் தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும்.
GNOME 3 பணிமேடை தயார்மைப்பு, அமைவாக்கம் மற்றும் நிர்வாகம் பற்றிய கூடுதல் தகவலுக்கு டெஸ்க்டாப் இடப்பெயர்ப்பு மற்றும் நிர்வாக வழிகாட்டியைப் பார்க்கவும்.

GTK+ 3

GNOME 3 ஆனது GTK+ 3 தரவகத்தைப் பயன்படுத்துகிறது, அதை GTK+ 2 உடன் இணையாக நிறுவ முடியும். GTK+ மற்றும் GTK+ 3 ஆகிய இரண்டுமே Red Hat Enterprise Linux 7.0 இல் உள்ளன. முன்பே உள்ள GTK+ 2 பயன்பாடுகள் GNOME 3 இல் முன்பைப் போலவே செயல்படும்.

GNOME Boxes

Red Hat Enterprise Linux 7.0 மெய்நிகர் கணினிகளையும் தொலைநிலை கணினிகளையும் காணவும் அணுகவும் பயன்படும் லேசான வரைவியல் பணிமேடை மெய்நிகராக்கக் கருவியை அறிமுகப்படுத்துகிற. GNOME Boxes ஆனது குறைந்தபட்ச அமைவாக்கங்களை மட்டும் செய்து, வெவ்வேறு இயக்க முறைமைகளையும் பயன்பாடுகளையும் முயற்சித்து சோதித்துப் பார்க்கும் வசதியை அளிக்கிறது.

18.2. KDE

Red Hat Enterprise Linux 7.0 இல் KDE Plasma Workspaces பதிப்பு 4.10 மற்றும் KDE இயங்குதளம் மற்றும் பயன்பாடுகளின் சமீபத்திய பதிப்புகள் இடம்பெற்றுள்ளன. வெளியீட்டைப் பற்றி மேலும் அறிய http://www.kde.org/announcements/4.10/ ஐப் பார்க்கவும்

KScreen

KDE க்கான புதிய திரை நிர்வாக மென்பொருளான KScreen இல் பல திரைகளை அமைவாக்கம் செய்தல் மேம்பட்டுள்ளது. KScreen மானிட்டர் அமைவாக்கம் மற்றும் இணைக்கபப்ட்ட மானிட்டர்களுக்கான தானியங்கு தனியமைப்பு சேமிப்பு மற்றும் மீட்பு ஆகியவற்றைச் செய்வதற்கான புதிய பயனர் இடைமுகத்தை வழங்குகிறது. KScreen பற்றிய விரிவான தகவலுக்கு, http://community.kde.org/Solid/Projects/ScreenManagement ஐப் பார்க்கவும்

பாடம் 19. இணைய சேவையகங்கள் மற்றும் சேவைகள்

Apache HTTP Server 2.4

Red Hat Enterprise Linux 7.0 இல், Apache HTTP Server இன் (httpd) பதிப்பு 2.4 சேர்க்கப்பட்டுள்ளது, இது பல புதிய அம்சங்களை வழங்குகிறது:
  • "நிகழ்வு" செயலாக்க தொகுதிக்கூறின் மேம்படுத்தப்பட்ட பதிப்பானது, ஒத்திசைவற்ற கோரிக்கை செயலாக்கத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது;
  • mod_proxy தொகுதிக்கூறில், பூர்வீக FastCGI ஆதரவு;
  • Lua மொழியைப் பயன்படுத்தி செய்யப்படும் உட்பொதித்த ஸ்கிரிப்ட்டிங்குக்கான ஆதரவு.
httpd 2.4 இலான அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் பற்றிய கூடுதல் தகவலை http://httpd.apache.org/docs/2.4/new_features_2_4.html இல் காணலாம். அமைவாக்கக் கோப்புகளை தகவமைப்பது குறித்த வழிகாட்டியும் உள்ளது: http://httpd.apache.org/docs/2.4/upgrading.html.

MariaDB 5.5

Red Hat Enterprise Linux 7.0 இல் MySQL இன் முன்னிருப்பு செயல்படுத்தல் MariaDB ஆகும். MariaDB என்பது MySQL தரவுத்தள திட்டப்பணியின் சமூகம் உருவாக்கிய வகையாகும், இது MySQL க்கு மாற்றை வழங்குகிறது. MariaDB, MySQL உடனான API மற்றும் ABI இணக்கத்தன்மையைத் தக்கவைத்துள்ளது, அத்துடன் புதிய சில அம்சங்களையும் கொண்டுள்ளது; எடுத்துக்காட்டாக தடுக்காத கிளையன் API தரவகம், மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்ட Aria மற்றும் XtraDB சேமிப்பக எஞ்சின்கள், சிறந்த சேவையக நிலை மாறிகள் அல்லது மேம்படுத்தப்பட்ட நகலெடுத்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
MariaDB பற்றிய விரிவான தகவலை https://mariadb.com/kb/en/what-is-mariadb-55/ இல் காணலாம்.

PostgreSQL 9.2

PostgreSQL என்பது ஒரு மேம்பட்ட பொருள்-தொடர்பியல் தரவுத்தள நிர்வாக முறைமையாகும் (DBMS). postgresql தொகுப்புகளில், PostgreSQL சேவையக தொகுப்பு, கிளையன் நிரல்கள் மற்றும் PostgreSQL DBMS சேவையகத்தை அணுகத் தேவையான தரவகங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
Red Hat Enterprise Linux 7.0 இல், PostgreSQL இன் பதிப்பு 9.2 இடம்பெற்றுள்ளது. புதிய அம்சங்கள், வழுநீக்கங்கள் மற்றும் Red Hat Enterprise Linux 6 இல் வழங்கப்பட்ட பதிப்பு 8.4 உடனான சாத்தியமுள்ள இணக்கமின்மைகள் பற்றிய பட்டியலுக்கு அப்ஸ்ட்ரீம் வெளியீட்டுக் குறிப்புகளைக் காணவும்:
அல்லது PostgreSQL wiki பக்கங்களைக் காணவும்:

பாடம் 20. ஆவணமாக்கம்

Red Hat Enterprise Linux 7.0 க்கான ஆவணமாக்கத்தில் பல தனித்தனி ஆவணங்கள் உள்ளன. இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றும் பின்வபவை பற்றியவை:
  • வெளியீடு ஆவணமாக்கம்
  • நிறுவல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பாதுகாப்பு
  • கருவிகள் மற்றும் செயல்திறன்
  • க்ளஸ்டரிங்
  • மெய்நிகராக்கம்

20.1. வெளியீடு ஆவணமாக்கம்

வெளியீட்டு அறிக்கை

வெளியீட்டுக் குறிப்புகள் Red Hat Enterprise Linux 7.0 இல் உள்ள முக்கியமான புதிய அம்சங்களை ஆவணப்படுத்துகிறது.

தொழில்நுட்ப குறிப்புகள்

Red Hat Enterprise Linux தொழில்நுட்பக் குறிப்புகள் இந்த வெளியீட்டில் உள்ள அறியப்பட்ட பிரச்சனைகள் பற்றிய தகவலைக் கொண்டுள்ளது.

இடப்பெயர்ப்பு திட்டமிடல் வழிகாட்டி

Red Hat Enterprise Linux இடப்பெயர்ப்பு திட்டமிடல் வழிகாட்டி Red Hat Enterprise Linux 6 இல் இருந்து Red Hat Enterprise Linux 7 க்கு இடப்பெயர்ப்பது பற்றிய தகவலை ஆவணப்படுத்துகிறது.

டெஸ்க்டாப் இடப்பெயர்ப்பு மற்றும் நிர்வாக வழிகாட்டி

டெஸ்க்டாப் இடப்பெயர்ப்பு மற்றும் நிர்வாக வழிகாட்டி என்பது Red Hat Enterprise Linux 7 இல் GNOME 3 டெஸ்க்டாப் திட்டமிடல், தயாரமைத்தல், அமைவாக்கம் மற்றும் நிர்வாகத்திற்கான வழிகாட்டியாகும்.

20.2. நிறுவல் மற்றும் வரிசைப்படுத்தல்

நிறுவல் கையேடு

நிறுவல் வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இன் நிறுவல் தொடர்பான தகவல்களை ஆவணப்படுத்துகிறது. இது கிக்ஸ்டார்ட் மற்றும் PXE நிறுவல்கள் மற்றும் VNC மூலம் நிறுவுதல் போன்ற மேம்பட்ட நிறுவல் முறைகளைப் பற்றியும் நிறுவலுக்குப் பிறகான பொதுவான பணிகளைப் பற்றியும் விவரிக்கிறது.

கணினி நிர்வாகி வழிகாட்டி

கணினி நிர்வாகி வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 ஐ தயார்மைத்தல், அமைவாக்கம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.

கணினி நிர்வாகி குறிப்பு வழிகாட்டி

கணினி நிர்வாகி குறிப்பு வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 நிர்வாகிகளுக்கான குறிப்பு வழிகாட்டியாகும்.

சேமிப்பக நிர்வாக கையேடு

சேமிப்பக நிர்வாக வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இல் சேமிப்பக சாதனங்களையும் கோப்பு முறைமைகளையும் எப்படி சிறப்பாக நிர்வகிப்பது என்பது பற்றிய வழிமுறைகளை வழங்குகிறது. இது Linux இன் Red Hat Enterprise Linux அல்லது Fedora விநியோகங்களில் ஓரளவு அனுபவம் கொண்ட கணினி நிர்வாகிகளுக்கானது.

க்ளோபல் கோப்பு முறைமை 2

Global File System 2 புத்தகம் Red Hat Enterprise Linux 7 இல் Red Hat GFS2 ஐ (Global File System 2) அமைவாக்கம் செய்தல் மற்றும் பராமரித்தல் பற்றிய தகவலை வழங்குகிறது.

தருக்க தொகுதி மேலாளர் நிர்வாகம்

சேமிப்பக நிர்வாக வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இல் சேமிப்பக சாதனங்களையும் கோப்பு முறைமைகளையும் எப்படி சிறப்பாக நிர்வகிப்பது என்பது பற்றிய வழிமுறைகளை வழங்குகிறது. இது Linux இன் Red Hat Enterprise Linux அல்லது Fedora விநியோகங்களில் ஓரளவு அனுபவம் கொண்ட கணினி நிர்வாகிகளுக்கானது.

கெர்னல் செயலிழப்பு டம்ப் வழிகாட்டி

கெர்னல் செயலிழப்பு டம்ப் வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இல் உள்ள kdump செயலிழப்பு மீட்பு சேவையை எப்படி அமைவாக்க்ம் செய்வது, சோதிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பது பற்றிய தகவலை ஆவணப்படுத்துகிறது.

20.3. பாதுகாப்பு

பாதுகாப்பு கையேடு

பாதுகாப்பு வழிகாட்டி, பயனர்களும் நிர்வாகிகளும், கணினிக்குள்ளான மற்றும் தொலைநிலை அத்துமீறல், தவறான பயன்பாடு மற்றும் தீங்கிழைக்கும் செயல்களிலிருந்து பணிக்கணினிகளையும் சேவையகக் கணினிகளையும் பாதுகாக்கும் செயல்முறைகள் மற்றும் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

SELinux பயனர் மற்றும் நிர்வாகி வழிகாட்டி

SELinux பயனர் மற்றும் நிர்வாகி வழிகாட்டி பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட (Security-Enhanced) Linux இன் நிர்வாகம் மற்றும் பயன்பாடு பற்றிய தகவல்களை விவரிக்கிறது. Red Hat Enterprise Linux 6 இல் தனியொரு புத்தகத்தில் ஆவணப்படுத்தியிருந்த கட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை நிர்வகித்தல் பற்றிய தகவல் இப்போது SELinux பயனர் மற்றும் நிர்வாகி வழிகாட்டியின் பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

20.4. கருவிகள் மற்றும் செயல்திறன்

வளம் மேலாண்மை கையேடு

வள நிர்வாக வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இல் கணினி வளங்களை நிர்வகிப்பதற்கான கருவிகள் மற்றும் உத்திகளைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துகிறது.

மின் மேலாண்மை கையேடு

மின்சக்தி நிர்வாக வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இல் எப்படி மின்சக்தியின் பயனளவை நிர்வகிப்பது என்பது பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துகிறது.

செயல்திறன் மேம்படுத்தல் வழிகாட்டி

செயல்திறன் மேம்படுத்தல் வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இல் உபமுறைமை ஒப்பு வெளியீட்டை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றிய தகவலை ஆவணப்படுத்துகிறது.

வல்லுனர் கையேடு

உருவாக்குநர் வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 ஐ பயன்பாடு உருவாக்கத்திற்கான சிறந்த தொழிற்துறை தளமாக திகழச் செய்யும் பல்வேறு அம்சங்கள் மற்றும் கருவிகளைப் பற்றி விவரிக்கிறது.

SystemTap புதியவர்கள் கையேடு

SystemTap தொடக்கநிலைப் பயனர்களுக்கான வழிகாட்டி Red Hat Enterprise Linux இன் பல்வேறு உபமுறைமைகளைக் கண்காணிக்க SystemTap ஐ எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான அடிப்படை வழிமுறைகளை வழங்குகிறது.

SystemTap குறிப்பு

SystemTap Tapset குறிப்பு வழிகாட்டி, SystemTap ஸ்கிரிப்ட்டுகளில் பயனர்கள் பயன்படுத்தக்கூடிய பொதுவான டேப்செட் வரையறைகளை விவரிக்கிறது.

20.5. க்ளஸ்டரிங் மற்றும் கூடுதல் கிடைத்தல்

ஹை அவைலபிலிட்டி துணை நிரல் நிர்வாகம்

அதிகம் கிடைக்கும் துணை நிரல் நிர்வாக வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இல் ஹை அவைலபிலிட்டி துணை நிரலை எப்படி அமைவாக்கம் செய்து நிர்வகிப்பது என்பது பற்றிய தகவலை வழங்குகிறது.

ஹை அவைலபிலிட்டி துணை நிரல் மேலோட்டப் பார்வை

ஹை அவைலபிலிட்டி துணை நிரல் மேலோட்டப் பார்வை ஆவணமானது Red Hat Enterprise Linux 7 க்கான ஹை அவைலபிலிட்டி துணை நிரல் பற்றிய மேலோட்டப் பார்வையை வழங்குகிறது.

ஹை அவைலபிலிட்டி துணை நிரல் குறிப்பு

ஹை அவைலபிலிட்டி துணை நிரல் குறிப்பு என்பது Red Hat Enterprise Linux 7 க்கான ஹை அவைலபிலிட்டி துணை நிரலுக்கான குறிப்பு வழிகாட்டியாகும்.

சுமை சமநிலைப்படுத்தல் நிர்வாகம்

சுமை சமநிலைப்படுத்தல் நிர்வாகம் என்பது Red Hat Enterprise Linux 7 இல் உயர் செயல்திறன் கொண்ட சுமை சமநிலைப்படுத்தலை அமைவாக்கம் செய்தல் மற்றும் நிர்வகித்தலுக்கான வழிகாட்டியாகும்.

DM மல்டிபாத்

DM மல்டிபாத் புத்தகமானது Red Hat Enterprise Linux 7 க்கான டிவைஸ்-மேப்பர் மல்ட்டிபாத் அம்சத்தை அமைவாக்கம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் பற்றி பயனர்களுக்கு வழிகாட்டுகிறது.

20.6. மெய்நிகராக்கம்

மெய்நிகராக்க தொடக்க வழிகாட்டி

மெய்நிகராக்க தொடக்க வழிகாட்டி என்பது Red Hat Enterprise Linux 7 இல் மெய்நிகராக்கத்திற்கான அறிமுகமாகும்.

மெய்நிகராக்க தயாரமைப்பு மற்றும் நிர்வாக வழிகாட்டி

மெய்நிகராக்க தயாரமைப்பு மற்றும் நிர்வாக வழிகாட்டி Red Hat Enterprise Linux 7 இல் மெய்நிகராக்கங்களை நிறுவுதல், அமைவாக்கம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.

மெய்நிகராக்க பாதுகாப்பு வழிகாட்டி

மெய்நிகராக்க பாதுகாப்பு வழிகாட்டி Red Hat வழங்கும் மெய்நிகராக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் மேலோட்டப் பார்வையை வழங்குகிறது, மேலும் மெய்நிகராக்கப்பட்ட சூழல்களில் உள்ள மெய்நிகராக்க வழங்கிகள், விருந்தினர்கள் மற்றும் அகிரப்பட்ட உட்கட்டமைபு மற்றும் வளங்களைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்குகிறது.

மெய்நிகராக்க சரிசெய்தல் மற்றும் மேம்படுத்தல் வழிகாட்டி

மெய்நிகராக்க சரிசெய்தல் மற்றும் மேம்படுத்தல் வழிகாட்டி KVM மற்றும் மெய்நிகராக்க செயல்திறன்களைப் பற்றி விவரிக்கிறது. இந்த வழிகாட்டியில் உங்கள் வழங்கி கணினிகள் மற்றும் மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்களுக்கான KVM செயல்திறன் அம்சங்கள் மற்றும் விருப்பங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான குறிப்புகளும் பரிந்துரைகளும் உள்ளன.

Linux கன்டெய்னர்ஸ் வழிகாட்டி

Linux கன்டெய்னர்ஸ் வழிகாட்டி Red Hat Enterprise Linux 7.0 இல் Linux கன்டெய்னர்களை அமைவாக்கம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது, மேலும் Linux கன்டெய்னர்களுக்கான பயன்பாட்டு உதாரணங்களின் மேலோட்டப் பார்வையையும் வழங்குகிறது.

பாடம் 21. சர்வதேசமயமாக்கல்

21.1. Red Hat Enterprise Linux 7.0 சர்வதேச மொழிகள்

Red Hat Enterprise Linux 7.0 பல மொழிகளின் நிறுவலையும் உங்கள் தேவைகளின் அடிப்படையில் மொழிகளை மாற்றுவதையும் ஆதரிக்கிறது.
Red Hat Enterprise Linux 7.0 இல் பின்வரும் மொழிகள் ஆதரிக்கப்படுகின்றன:
  • கிழக்காசிய மொழிகள் - ஜாப்பனீஸ், கொரியன், எளிய சீனம் மற்றும் பாரம்பரிய சீனம்.
  • ஐரோப்பிய மொழிகள் - ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலியன், போர்ச்சுகீஸ் பிரேசிலியன் மற்றும் ரஷ்யன்.
  • இந்திய மொழிகள் - அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுகு.
கீழே உள்ள அட்டவணை ஆதரிக்கப்படும் மொழிகள், அவற்றின் வட்டார மொழிகள், நிறுவப்படும் முன்னிருப்பு எழுத்துருக்கள் மற்றும் சில ஆதரிக்கப்படும் மொழிகளுக்குத் தேவையான தொகுப்புகள் ஆகியவற்றைக் காண்பிக்கின்றன.
எழுத்துரு அமைவாக்கம் பற்றிய கூடுதல் தகவலுக்கு டெஸ்க்டாப் இடப்பெயர்ப்பு மற்றும் நிர்வாக வழிகாட்டியைப் பார்க்கவும்.

அட்டவணை 21.1. மொழி ஆதரவு அட்டவணை

பிரதேசம் மொழி வட்டார மொழி முன்னிருப்பு எழுத்துரு (எழுத்துரு தொகுப்பு) உள்ளிடும் முறைகள்
பிரேசில் போர்ச்சுகீஸ் pt_BR.UTF-8 DejaVu Sans (dejavu-sans-fonts)
ப்ரான்ஸ் பிரெஞ்சு fr_FR.UTF-8 DejaVu Sans (dejavu-sans-fonts)
ஜெர்மனி ஜெர்மன் de_DE.UTF-8 DejaVu Sans (dejavu-sans-fonts)
இத்தாலி இத்தாலி it_IT.UTF-8 DejaVu Sans (dejavu-sans-fonts)
ரஷ்யா ரஷ்யன் ru_RU.UTF-8 DejaVu Sans (dejavu-sans-fonts)  
ஸ்பெய்ன் ஸ்பானிஷ் es_ES.UTF-8 DejaVu Sans (dejavu-sans-fonts)
USA ஆங்கிலம் en_US.UTF-8 DejaVu Sans (dejavu-sans-fonts)
சைனா எளிய சீனம் zh_CN.UTF-8 WenQuanYi Zen Hei Sharp (wqy-zenhei-fonts) ibus-libpinyin, ibus-table-chinese
ஜப்பான் ஜப்பானிய ja_JP.UTF-8 VL PGothic (vlgothic-p-fonts) ibus-kkc
கொரியா கொரியன் ko_KR.UTF-8 NanumGothic (nhn-nanum-gothic-fonts) ibus-hangul
தைவான் மரபு சீனம் zh_TW.UTF-8 AR PL UMing TW (cjkuni-uming-fonts) ibus-chewing, ibus-table-chinese
இந்தியா அசாமிஸ் as_IN.UTF-8 Lohit Assamese (lohit-assamese-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
பெங்காலி bn_IN.UTF-8 Lohit Bengali (lohit-bengali-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
குஜத்தி gu_IN.UTF-8 Lohit Gujarati (lohit-gujarati-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
இந்தி hi_IN.UTF-8 Lohit Hindi (lohit-devanagari-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
கன்னடம் kn_IN.UTF-8 Lohit Kannada (lohit-kannada-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
மலையாளம் ml_IN.UTF-8 Meera (smc-meera-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
மராத்தி mr_IN.UTF-8 Lohit Marathi (lohit-marathi-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
ஒடியா or_IN.UTF-8 Lohit Oriya (lohit-oriya-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
பஞ்சாபி pa_IN.UTF-8 Lohit Punjabi (lohit-punjabi-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
தமிழ் ta_IN.UTF-8 Lohit Tamil (lohit-tamil-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib
தெலுங்கு te_IN.UTF-8 Lohit Telugu (lohit-telugu-fonts) ibus-m17n, m17n-db, m17n-contrib

21.2. சர்வதேசமயமாக்கலிலான பொதுவான மாற்றங்கள்

புதிய yum-langpacks துணைநிரல்

இப்போது ஒரு புதிய YUM துணை நிரலான yum-langpacks தற்போதைய மொழி வட்டாரத்திற்கான பல்வேறு மொழிபெயர்ப்பு உப தொகுப்புகளை நிறுவ பயனர்களை அனுமதிக்கிறது.

வட்டார மொழி மற்றும் விசைப்பலகை லேயவுட் அமைவுகளை மாற்றுதல்

localectl என்பது கணினி வட்டாரம் மற்றும் விசைப்பலகை லேயவுட் அமைவுகளை அறிந்து மாற்ற உதவும் கருவியாகும்; இந்த அமைவுகள் உரை கன்சோல்களில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் டெஸ்க்டாப் சூழல்களில் தக்கவைக்கப்படுகின்றன. localectl ஆனது SSH வழியாக தொலைநிலை கணினிகளை நிர்வகிக்க hostname மதிப்புருவையும் ஏற்கிறது.

21.3. உள்ளிடும் முறைகள்

IBus இலான மாற்றங்கள்

Red Hat Enterprise Linux 7.0 இல் இன்டெலிஜென்ட் இன்புட் பஸ் (IBus) பதிப்பு 1.5. சேர்க்கப்பட்டுள்ளது, இப்போது IBus க்கான ஆதரவு GNOME இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • gnome-control-center region கட்டளையைப் பயன்படுத்தி உள்ளீட்டு முறைகளைச் சேர்க்க முடியும், மேலும் gnome-control-center keyboard கட்டளையைப் பயன்படுத்தி உள்ளீட்டு குறுக்குவிசைகளையும் அமைக்க முடியும்.
  • GNOME அல்லாத அமர்வுகளுக்கு, ibus ஆல் ibus-setup கருவியில், XKB லேயவுட்டுகள் மற்றும் உள்ளீட்டு முறைகளை அமைவாக்கம் செய்ய முடியும், மேலும் அவற்றை குறுக்குவிசை கொண்டு மாற்றவும் முடியும்.
  • Red Hat Enterprise Linux 6 இல் சேர்க்கப்பட்டிருந்த ibus இல் முன்னிருப்பு குறுக்குவிசையாக இருந்த Control+space க்கு பதிலாக Super+space இடம்பெற்றுள்ளது. இது Alt+Tab விசைச் சேர்க்கையின் மூலம் பயனர் காண்கின்ற UI ஐ ஒத்த UI ஐ பயனருக்குக் காண்பிக்கும். Alt+Tab சேர்க்கையைப் பயன்படுத்தி பல உள்ளீட்டு முறைகளுக்கிடையே மாறலாம்.

IBus க்கான கணிப்பு உள்ளீட்டு முறை

ibus-typing-booster என்பது ibus இயங்குதளத்திற்கான கணிப்பு உள்ளீட்டு முறையாகும். அது பகுதியளவு உள்ளீட்டை அடிப்படையாகக் கொண்டு சொற்களை முழுமையாக்கும். பயனர்கள் காண்பிக்கப்படும் பரிந்துரைகளின் பட்டியலில் இருந்து விரும்பும் சொற்களைத் தேர்ந்தெடுத்து தட்டச்சு வேகத்தையும் எழுத்துக்கூட்டின் துல்லியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம். ibus-typing-booster ஆனது Hunspell அகராதிகளுடனும் செயல்படும், மேலும் Hunspell அகராதியைப் பயன்படுத்தும் மொழிக்கும் பரிந்துரைகளை வழங்க முடியும்.
ibus-typing-booster தொகுப்பானது தேவைப்படக்கூடிய கட்டாயமற்ற தொகுப்பு என்பதையும் அது முன்னிருப்பாக input-methods குழுவின் ஒரு பகுதியாக நிறுவப்படாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
உள்ளீட்டு முறைகளிலான மாற்றங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு டெஸ்க்டாப் இடப்பெயர்ப்பு மற்றும் நிர்வாக வழிகாட்டியைப் பார்க்கவும்.

21.4. எழுத்துருக்கள்

fonts-tweak-tool

fonts-tweak-tool எனும் புதிய கருவி பயனர் எழுத்துரு அமைவாக்கத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மொழிக்குமான முன்னிருப்பு எழுத்துருக்களை அமைவாக்கம் செய்ய பயனர்களை அனுமதிக்கிறது.

21.5. மொழி-சார்ந்த மாற்றங்கள்

அராபிக்

Red Hat Enterprise Linux 7.0 இல் கிடைக்கின்ற Paktype இலிருந்தான புதிய அரபிக் எழுத்துருக்கள்: paktype-ajrak, paktype-basic-naskh-farsi, paktype-basic-naskh-sindhi, paktype-basic-naskh-urdu மற்றும் paktype-basic-naskh-sa.

சீன

  • இப்போது WQY Zenhei எழுத்துரு, எளிய சீனத்திற்கான முன்னிருப்பு எழுத்துருவாகும்.
  • எளிய சீனத்திற்கான முன்னிருப்பு எஞ்சின், Red Hat Enterprise Linux 6 இல் பயன்படுத்தப்பட்ட ibus-pinyin இலிருந்து ibus-libpinyin ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்திய மொழிகள்

  • இந்தி, காஷ்மிரி, கொங்கனி, மைதிலி, மராத்தி மற்றும் நேபாளி ஆகிய மொழிகளுக்கு முன்பிருந்த தனித்தனியான Lohit எழுத்துருக்களுக்கு பதிலாக புதிய Lohit Devanagari எழுத்துரு இடம்பெற்றுள்ளது. இந்த மொழிகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய தனித்துவமான கிலிஃப்கள் Open Type Font locl டேகுகளின் மூலம் Lohit Devanagari இல் கையாளப்பட முடியும்.
  • கன்னட மொழிக்கு gubbi-fonts மற்றும் navilu-fonts ஆகிய புதிய எழுத்துரு தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜப்பானிய

  • இனி IPA எழுத்துருக்கள் முன்னிருப்பாக நிறுவப்படாது
  • இப்போது புதிய libkkc பின்புல முறைமையைப் பயன்படுத்தும் ibus-kkc, அதாவது Kana Kanji Conversion, புதிய முன்னிருப்பு ஜாப்பனீஸ் உள்ளீட்டு முறை எஞ்சினாகும். இது ibus-anthy, anthy, மற்றும் kasumi க்கு பதிலாக இடம்பெற்றுள்ளது.

கொரியன்

இப்போது Nanum எழுத்துரு முன்னிருப்பு எழுத்துருவாகப் பயன்படுத்தப்படுகிறது.

புதிய வட்டாரங்கள்

Red Hat Enterprise Linux 7.0 கொங்கனி (kok_IN) மற்றும் புஷ்டோ (ps_AF) ஆகிய புதிய வட்டார மொழிகளை ஆதரிக்கிறது.

பாடம் 22. ஆதரிக்கக்கூடிய தன்மை மற்றும் பராமரிப்பு

ABRT 2.1

Red Hat Enterprise Linux 7.0 இல் தானியக்க பிழை அறிக்கையிடும் கருவி (ABRT) 2.1 இடம்பெற்றுள்ளது, இதில் மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகமும், செயலிழப்புப் புள்ளிவிவரங்களை சேகரித்தல் போன்ற கணினி செயலாக்கத்திற்குப் பொருத்தமான லேசான, பெயரிலா சிக்கல் அறிக்கைகளான uReports ஐ அனுப்பும் வசதியும் உள்ளது. கூடுமான வரை அதிகபட்ச மென்பொருள் வழுக்களைக் கண்டறிவதற்காக, Red Hat Enterprise Linux 7.0 இல் முன்னிருப்பாக ABRT சேர்க்கப்பட்டுள்ளது, இது பயன்பாடு செயலிழப்புகள் குறித்த அறிக்கைகளை தானாக Red Hat க்கு அனுப்பும் வகையில் அமைவாக்கம் செய்யபப்ட்டுள்ளது.
ABRT 2.1 இல் Java மற்றும் Ruby இல் ஆதரிக்கப்படும் மொழிகளின் தொகுதி விரிவாக்கப்பட்டுள்ளது.

மீள்பார்வைவரலாறு

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 0.0-0.8.2Mon Mar 24 2014Shantha kumar
Updated Tamil Translations
மீள்பார்வை 0.0-0.8.1Tue Mar 11 2014Chester Cheng
Translation files synchronised with XML sources 0.0-0.7
மீள்பார்வை 0.0-0.8Thu Dec 11 2013Eliška Slobodová
Red Hat Enterprise Linux 7.0 Beta வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு.