Red Hat Enterprise Linux 7 ஐ அறிமுகப்படுத்துகிறோம்

Red Hat Enterprise Linux 7 தொழில் நிறுவன இயக்க முறைமையிலான மிக சமீபத்திய அம்சங்களைக் கொண்டுள்ளது

  • தொழில்நிறுவன வடிவமைப்பாளர்கள் லேசான பயன்பாட்டு தனிப்படுத்தல் போன்ற புதிய அம்சங்களை மிகவும் விரும்புவார்கள்.
  • பயன்பாட்டு உருவாக்குநர்கள் புதுப்பிக்கப்பட்ட உருவாக்கச் சூழலையும் பயன்பாட்டுத் தனியமைப்பு உருவாக்கக் கருவிகளையும் வரவேற்பார்கள். Red Hat உருவாக்குநர் வலைப்பதிவில் இது பற்றி மேலும் அறியலாம்.
  • கணினி நிர்வாகிகள் புதிய மேலாண்மைக் கருவிகளையும், மேம்பட்ட செயற்திறன் மற்றும் அளவுமாற்றத் தன்மை கொண்ட விரிவாக்கப்பட்ட கோப்பு முறைமைத் தெரிவுகளையும் விரும்புவார்கள்.

உண்மையான நிலைவட்டு, மெய்நிகர் கணினிகள் அல்லது கிளவுட் அமைப்புகளில் நிறுவப்படும் Red Hat Enterprise Linux 7 அடுத்த தலைமுறை வடிவமைப்பாளர்களுக்குத் தேவையான பல மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது.

இங்கிருந்து எங்கு செல்ல வேண்டும்:

  • Red Hat Enterprise Linux 7 தயாரிப்பு பக்கம்

    இது Red Hat Enterprise Linux 7 பற்றிய தகவலுக்கான முதல் பக்கம். இங்கு உங்கள் Red Hat Enterprise Linux 7 கணினியை திட்டமிடுதல், நிறுவுதல், பராமரித்தல் மற்றும் சிக்கல் தீர்த்தல் ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

  • Red Hat வாடிக்கையாளர் வலைவாசல்

    இது கட்டுரைகள், வீடியோக்கள் மற்றும் பிற Red Hat உள்ளடக்கங்களை அணுகுவதற்கான இடம், இங்கு நீங்கள் Red Hat ஆதரவு நேர்வுகளையும் (சப்போர்ட் கேஸ்) நிர்வகிக்கலாம்.

  • ஆவணமாக்கம்

    இங்கு Red Hat Enterprise Linux மற்றும் பிற Red Hat வழங்கல்கள் தொடர்பான ஆவணமாக்கங்கள் கிடைக்கும்.

  • Red Hat சந்தா நிர்வாகம்

    இது கணினிகளை சிறப்பாக நிர்வகிக்க உதவுகின்ற வலை அடிப்படையிலான நிர்வாக இடைமுகம்.

  • Red Hat Enterprise Linux தயாரிப்பு பக்கம்

    இது Red Hat Enterprise Linux தயாரிப்பு வழங்கல்கள் பற்றிய அறிமுகத்தை வழங்குகிறது.